இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சற்றுமுன் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனித்துவமான படைப்புகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பார்ட் 1, போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்கள் மனதை கவர்ந்த படங்களாக அமைந்தது மட்டும் இன்றி பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது.
குறிப்பாக தனுஷின் 'ஆடுகளம்' திரைப்படம் சிறந்த திரைக்கதற்கான தேசிய விருதையும், சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் வெற்றிமாறனுக்கு பெற்று தந்தது. அதேபோல் 'விசாரணை' திரைப்படமும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இப்படி தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் கடந்த ஆண்டு நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து இயக்கியிருந்த திரைப்படம் தான் விடுதலை பார்ட் 1.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சேத்தன், இளவரசு, சரவண சுப்பையா, போன்ற பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். சூரியை காமெடி நடிகர் என்கிற தளத்தில் இருந்து, கதையின் நாயகனாக மாற்றிய இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கி வரும் இரண்டாவது பாகம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு, முடிவடைந்து ரிலீஸ் தேதி குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று வெளியாக உள்ளதாக பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சற்று முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதி ரத்த காயங்களுடன் கையில் கத்தியோடு ஓடி வருவது போலவும், மற்றொரு போஸ்டரில் சூரிய ஒளியோடு பிரகாசிக்கும் இயற்கை அழகில்... நடிகை மஞ்சுவாரியருடன் கையில் சைக்கிளை வைத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்வது போலவும் உள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 'விடுதலை' திரைப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வீரத்தின் விளைநிலமாய், வெற்றியின் பிறப்பிடமாய்! இயக்குனர் 'ன் சகாப்தம் படைத்திட வாழ்த்துகள்.
'இசைஞானி' pic.twitter.com/CVIQsZfHaY