- Home
- Gallery
- நடிகர் கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2' படப்பிடிப்பில் விபத்து - சண்டை பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்!
நடிகர் கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2' படப்பிடிப்பில் விபத்து - சண்டை பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்!
நடிகர் கார்த்தி நடிப்பில் ஜூலை 15-ஆம் தேதி 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் ஏற்ப்பட்ட விபத்தில், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, உள்ளிட்ட பலர் நடிப்பில்... கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. நடிகர் கார்த்தி அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில், அப்பா கார்த்திக் ரகசிய உளவாளியாகவும், மகன் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தனர்.
தண்ணீரில் பாட்டில் வெயிலில் படும் போது ஏற்படும் கொடிய பிரச்சனை குறித்தும், தண்ணீரை கூட பணமாக்க நினைக்கும் ஊழலை, மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம்.. பாக்ஸ் ஆபிஸில் 103 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள தகவலை, ஏற்கனவே படக்குழு அறிவித்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
இயக்குனர் பி எஸ் மித்திரன் இயக்கி வரும் இந்த படத்தை, முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து வருகிறது. மேலும் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வேலு குட்டி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேப்பில் நடந்து வரும் நிலையில், எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்ட ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!
அவர் மேலே இருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்து நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இச்சம்பவம் குறித்து தற்போது விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது