விரைவில் “பிக்பாஸ் சீசன் 4”... தாறுமாறு வைரலாகும் புரோமோ வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 22, 2020, 5:15 PM IST
Highlights

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

 

இதையும் படிங்க: சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா?... தீயாய் பரவும் தகவலின் உண்மை நிலவரம் இதோ...!

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்திருக்க வேண்டியது ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழல்நிலை ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனுக்கான புரோமோஷன் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: பண்ணை வீட்டில் வாக்கிங்... செம்ம வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ...!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனையும் நாகார்ஜுனா  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Here is the most awaited time of the year!!! coming soon on pic.twitter.com/cQZ1e1kclI

— starmaa (@StarMaa)

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

தற்போது தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்டார் மா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பிக்பாஸ் லோகோவான கண் சிம்பிளில் மட்டும் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த முறை தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டு பின்னரே நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!