கேக்கை மாறி மாறி மூஞ்சில் பூசி... கலகலப்பாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு..! வீடியோ

Published : Jul 22, 2020, 03:43 PM IST
கேக்கை மாறி மாறி மூஞ்சில் பூசி... கலகலப்பாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு..! வீடியோ

சுருக்கம்

யோகி பாபுவின் வீட்டில் கலை கட்டிய அவரது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  

யோகி பாபுவின் வீட்டில் கலை கட்டிய அவரது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பவர், காமெடி நடிகர் யோகி பாபு. அவரது டைமிங் டயலாக்குகள் தான், இவரை ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளது.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை கண்டு, சமீப காலமாக, இவரை காமெடியனாக மட்டும் இல்லாமல்... ஹீரோயிசம் கொண்ட படங்களிலும் நடிக்க வைக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மாஸ்க் போட்டு கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக உலா வரும் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படம்!
 

ஏற்கனவே இவர் இப்படி நடித்து வெளியான, ஜாம்பி, தர்மபிரபு, கூர்க்கா ஆகிய படங்கள், முதலுக்கு மோசம் இல்லாமல் கல்லா காட்டியது. மேலும், இவர் நடிப்பில் வெளியான காக்டெய்ல் திரைப்படம் சமீபத்தில், ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனினும் இவரை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கவும், இயக்கவும் கடும் போட்டியே நிலவி வருகிறது. 

 சில மாதங்களுக்கு முன்பே, திருமணமாகி உள்ளதால், இரவு பகல் பாராமல் கண் முழித்து உழைத்தது போதும், முடிந்த வரை... குடும்பத்துடனும் நேரம் செலவிட வேண்டும் என ஹீரோவாக நடிக்கும் படங்களை குறைத்து கொண்டார் யோகி பாபு.

மேலும் செய்திகள்: வனிதா ட்விட்டரை விட்டு ஓட்டம் பிடிக்க நயன்தாரா ட்விட் தான் காரணமா?
 

இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு ஓய்வு அமலில் உள்ளதால் படப்பிடிப்புகளில் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே மற்ற பிரபலங்களை போல் இவரும் உள்ளார். மேலும், தன்னால் முடிந்த வரை, ஊரடங்கு ஓய்வு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பலருக்கு உதவிகளை செய்தார்.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளை வீட்டிலேயே மிகவும் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதிலும் இவர் முகத்தில் ஒருவர் கேக் பூச, பதிலுக்கு இவரும் அவர் முகத்தில் கேக் பூச என கலகலப்பாக எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் யோகி பாபு. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!