
காலம் காலமாக கடவுள் முருகனின் பக்தர்களால் புனிதமாக போற்றப்பட்டு வரும் கந்த சஷ்டி கவசத்தில், தவறான வார்த்தைகள் உள்ளதாக கூறி, கறுப்பர் கூட்டம் என்கிற ஊடகம் ஒன்று, மிகவும் கேவலமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ரஜினிகாந்த் அதிரடி ட்விட் ஒன்றை போட்டு 5 நிமிடத்தில் அதிரடி காட்டியுள்ளார்.
கறுப்பர் கூட்டத்தின் இந்த விமர்சித்து, பல இந்தி மக்களின் மனதை புண் படுத்தும் விதத்தில் அமைந்ததால் இதற்க்கு எதிராக பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடல் உறுப்புகளை பற்றி இதில் கூறப்பட்டுள்ளதில் என்ன ஆபாசம் இருக்கிறது என பல்வேறு, விளக்கமும் கொடுத்து வந்தனர்.
இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
மேலும், இப்படி தரைகுறைவாக விமர்சிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்த தமிழக அரசுக்கு மக்கள் தரப்பில் மட்டும் இன்றி, பிரபலங்கள் தரப்பில் இருந்து நன்றிகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.. எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். மேலும், 5 நிமிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் ரீ ட்விட் செய்து, அதிரடி காட்டியுள்ளனர் ரசிகர்கள்.
ஒருமணி நேரத்தில் 7 ஆயிரத்திற்கு மேல் ரீ -ட்விட் செய்யப்பட்டு, 15 ஆயிரத்திற்கு மேல் லைக்குகளை குவித்துள்ளது இந்த பதிவு. அதே போல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலர் தலைவரின் இந்த செயலுக்கு நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.