கறுப்பர் கூட்டம் மீது வேல் வீசிய ரஜினிகாந்த்... ஈனச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு சரியான தண்டனை என கொந்தளிப்பு!!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 22, 2020, 12:27 PM IST
Highlights

பல கோடி மக்களின் மனதை குளிர வைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் மீது இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் தொடர் புகார்களை அளித்து வந்தனர். தமிழ் கடவுளான முருகனை கொச்சையாக அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

 

இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

 

 

இதையும்  படிங்க: சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா?... தீயாய் பரவும் தகவலின் உண்மை நிலவரம் இதோ...!

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைத் தடை செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். பல கோடி மக்களின் மனதை குளிர வைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

இதையும் படிங்க: பண்ணை வீட்டில் வாக்கிங்... செம்ம வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ...!

அதில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த  ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.. எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! என பதிவிட்டுள்ளார். 
 

pic.twitter.com/zWfRVpufXk

— Rajinikanth (@rajinikanth)
click me!