சுழற்றி அடிக்கும் பிரச்சனை... லீனா மணிமேகலைக்கு LOC!! போபால் போலீசார் அதிரடி!!

By manimegalai aFirst Published Jul 8, 2022, 10:26 PM IST
Highlights

கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'காளி' என்கிற ஆவணப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அவருக்கு எதிராராக  லுக் அவுட் சுற்றறிக்கையை (LOC) வெளியிட்டுள்ளனர் போபால் போலீசார்.
 

கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'காளி' என்கிற ஆவணப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அவருக்கு எதிராராக  லுக் அவுட் சுற்றறிக்கையை (LOC) வெளியிட்டுள்ளனர் போபால் போலீசார்.

மேலும் செய்திகள்: சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

இந்து கடவுளான காளி தேவியை ஆட்சேபிக்கும் விதமாக லீனா மணிமேகலை தான் இயக்கி தயாரித்திருக்கும், ஆவணப்படமாக 'காளி' போஸ்டரை வடிவமைத்திருந்தார். எனவே இவருக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நேரம், சிலர் லீனா மணிமேகலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தனர்.

இதை தொடாது தற்போது போபால் காவல்துறை, துணை ஆணையர் (டிசிபி), குற்றப்பிரிவு அதிகாரி அமித் குமார் ஆகியோர் லீனா மணிமேகலைக்கு LOC வழங்கியதை உறுதி படுத்தியுள்ளனர்.

காளி தேவியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மீதும்,  திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை மீதும் ஐபிசியின் 295 ஏ பிரிவின் கீழ் போபாலில் குற்றப்பிரிவு போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கூறுகையில் ஹிந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களை படங்களில் மோசமாக சித்தரிப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது என்றும் எனவே இந்த நடவடிக்கையை காவல் துறையினர் எடுத்துள்ளனர் என்கிறார்.

மேலும் செய்திகள்: கபாலீஸ்வரர் கோவிலில் இயக்குனருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!
 

மேலும்  'மஹுவா மொய்த்ராவின் அறிக்கை இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும் சவுகான் தெரிவித்துள்ளார். இந்து தெய்வங்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை, ஆனால் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது' அப்படி அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
 

அதே போல் காளி தேவி புகைபிடிப்பது போலவும், LGBTQ கொடியை வைத்திருப்பது போலவும் போஸ்டர் வெளியிட்டிருந்த லீனா மணிமேகலை பற்றி பேசிய உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, லீனா மணிமேகலை மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீசுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவர் வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது என கூறியுள்ளார். ஒரே ஒரு போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள, லீனா மணிமேகலைக்கு தற்போது எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் சுழற்றியடிக்க துவங்கியுள்ளது.

click me!