இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' பாகம் 1 படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' பாகம் 1 படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இரு பாகங்களாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்று முன்னர் இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: உண்மையில் விக்ரமுக்கு என்னதான் பிரச்சனை..! மருத்துவமனை அறிக்கை வெளியானது..!
சோழர்களை பற்றி கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்னும் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. நாவாலில் வரும் கதாபாத்திரங்களை கனகச்சிதமாக தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார் மணிரத்னம் என்பது தற்போது வெளியாகியுள்ள டீசரை பார்த்தாலே தெரிகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் அரசர்களாகவும், இளவரசிகளாகவும், வீரர்களாகவும் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு... விக்ரம் தரப்பில் இருந்து மாரடைப்பு செய்தியை மறுக்கப்படுகிறதா?
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டெம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்போதே படத்தின் புரமோஷன் பணிகளை துவங்கி விட்டது படக்குழு. அதன்படி, கடந்த சில தினங்களாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபலங்களின் கேரக்டர் லுக்கை வெளியிட்டு வந்த படக்குழு இன்று படத்தின் டீசரையும் சென்னை டிரேட் சென்டரில் விழா வைத்து வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசரை பார்க்கும் போதே... இந்த படத்திற்கு மணிரத்னம் எவ்வளவு உழைப்பை போட்டு இருப்பர் என்பதும், ஒவ்வொரு நட்சத்திரங்களும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. கனவுலகை கண் முன் நிறுத்தும் பிரமாண்டமாய்... வெளியாகி பார்ப்பவர்களை புல்லரிக்க செய்துள்ளது 'பொன்னியின் செல்வன்' டீசர்.