உண்மையில் விக்ரமுக்கு என்னதான் பிரச்சனை..! மருத்துவமனை அறிக்கை வெளியானது..!

By manimegalai a  |  First Published Jul 8, 2022, 6:07 PM IST

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது மேலாளர் அதற்க்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் இருந்து, விக்ரம் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
 


நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது மேலாளர் அதற்க்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் இருந்து, விக்ரம் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

56 வயதாகும் நடிகர் விக்ரம் இன்று தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, உடனடியாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் விக்ரம் நலமுடன் உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
 

மேலும் விக்ரமுக்கு, மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு அவரது மேலாளர் சூரிய நாராயணன் மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவில், விக்ரமுக்கு சாதாரண நெஞ்சுவலி மட்டுமே ஏற்பட்டதாகவும்... தற்போது சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நலம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: விக்ரமுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது? தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்!
 

விக்ரமுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து  மருத்துவ அறிக்கை வெளியாகாததால், விக்ரம் உடல்நிலை குறித்த உண்மை தகவல் மறைக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் எழுப்பி வந்த நிலையில், இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... நடிகர் விக்ரம் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் விக்ரம் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
 

pic.twitter.com/dFzFEQrt4i

— Suryanarayanan M (@sooriaruna)

 

click me!