
அரபிக் குத்து :
டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் தற்போது விஜயை வைத்து இயக்கி வருகிறார். பீஸ்ட் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திலுருந்து முதல் பாடலாக வெளியான அரபிக் குத்து 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படித்தது. அனிரூத் இசையமைத்திருந்த இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியிருந்தார். அனிரூத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.
செகண்ட் சிங்கிள் :
இதையடுத்து முந்தைய பாடலுக்கு போலவே இரண்டாம் பாடலுக்கும் ப்ரோமோ வெளியானது. இந்த முறை விஜய் ,நெல்சன், அனிரூத் மூவரும் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து வெளியான செகண்ட் ப்ரோமோவில் நெல்சனின் நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து கடந்த 19-ம் தேதி ஜாலியோ ஜிம்கானா என்னும் பாடல் வெளியானது. இந்த பாடல் கார்த்தி வரிகளில் அனிரூத் இசையில், விஜய் குரலில் அமைத்திருந்தது. ஆனால் முந்தைய பாடல் ஹிட்டை இது பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு...Beast Teaser : ஜாலி மூடில் இருந்து ஆக்ஷனுக்கு மாறும் தளபதி.. சுடச்சுட வருகிறது பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்
இறுதி பணிகள் :
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் 13 -ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் படத்தின் அப்டேட் தருவதாக கூறிய நெல்சன் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்திருந்தார்.
ட்ரைலர் தேதி :
இந்நிலையில் மீண்டும் நேற்று ட்வீட் செய்த இயக்குனர் நாளை அப்டேட் என பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று அப்டேட் வந்துள்ளது. ஆனால் இந்த முறை டீசருக்கு பதில் மாஸ் வீடியோவுடன் ட்ரைலர் தேதி மட்டும் கூறப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 2-ம் தேதி பீஸ்ட்ரைலர் வெளியாகவுள்ளது. இந்த ட்வீட் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.