Chris Rock: ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித்தின் அறையால் எகிறிய விலை...கிறிஸ் ராக்கிற்கு அடித்த 'ஜாக்பாட்'..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 30, 2022, 03:24 PM IST
Chris Rock: ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித்தின் அறையால் எகிறிய விலை...கிறிஸ் ராக்கிற்கு அடித்த 'ஜாக்பாட்'..!

சுருக்கம்

Chris Rock: ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித்திடம் அறை வாங்கியதை தொடர்ந்து, கிறிஸ் ராக் நடத்தும் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவுக்கு எகிறியுள்ளது.

ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித்திடம் அறை வாங்கியதை தொடர்ந்து, கிறிஸ் ராக் நடத்தும் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவுக்கு எகிறியுள்ளது. கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டும் விதமாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 94-வது ஆஸ்கர் விருது வழக்கும் விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. 

ஆஸ்கர் விருது விழா:

இதில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதன்முறையாக வென்ற நடிகர் வில் ஸ்மித், விழா மேடையில் கிறிஸ் ராக் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடை ஏறிய நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரை,  பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் ஆஸ்கர் விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்:

தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி ஜடாவின் உடல் நிலை குறித்து ஏளனமாக கிண்டலடித்ததால் பேசியுள்ளார். இதனால், கோபம் அடைந்த வில் ஸ்மித் மேடையில் ஏறி ஸ்டாண்ட் அப் காமெடியன் கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது. 

உருக்கத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் வில் ஸ்மித்:

விழாவில் நகைச்சுவை என்பது இயல்பா ஒன்றுதான், இருப்பினும் என்னுடைய மனைவி ஜடாவின் உடல் நிலை குறித்து ஏளனமாக கிண்டலடித்த தொகுப்பாளர் கிறிஸ் ராக் பேசியது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. அன்பும் கருணையும் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை என்று  பதிவிட்டுள்ளார். மேலும், எனது செயலுக்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்று உருக்கமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

கிறிஸ் ராக்கிற்கு எகிறிய விலை.:

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித்திடம் அறை வாங்கியதை தொடர்ந்து, ஸ்டாண்ட் அப் காமெடியன், கிறிஸ் ராக் நடத்தும் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவுக்கு எகிறியுள்ளது. வழக்கமாக ரூ. 3500 விற்கப்படும் டிக்கெட் தற்போது, ரூ 25,000 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....Kajal Agarwal: நிறைமாத கர்ப்பத்துடன் மீண்டும் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த காஜல் அகர்வால்...வைரல் போட்டோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?