
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் இயக்குனர் ஷங்கர். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையடுத்து ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.0 என அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஜொலிக்கிறார் ஷங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனும், கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இயக்குனர் ஷங்கர், தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்க கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் ஷங்கர்.
அந்த வகையில் தற்போது, அவரை இயக்குனராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர், அவருக்கு தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் வழங்கினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... viruman Movie : சர்ச்சையில் சிக்கிய விருமன்... ஷங்கர் மகள் நடித்த முதல் படம் ரிலீசாவதில் சிக்கல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.