
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். 40 வயதான இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கஷ்டப்பட்டு ஹீரோ ஆகியுள்ளார். இவர் நடிப்பில் செங்குன்றம் என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஷூட்டிங்கை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார். அப்போது செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அவர் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்தில் சிக்கினார்.
இதில் இருவருமே படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நடிகர் ஜெயக்குமார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நடிகர் ஜெயக்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சினிமாவில் ஹீரோவாக நடித்து சாதிக்க வேண்டும் என்கிற பெருங் கனவோடு இருந்த நடிகர் ஜெயக்குமார், அவர் நடித்த முதல் படம் ரிலீசாகும் முன்பே உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... samantha :இன்ஸ்டாகிராம் மூலம் மட்டும் நடிகை சமந்தாவுக்கு இவ்வளவு வருமானமா.. ஒரு போஸ்ட் போட்டாலே ஓஹோனு வாழலாமே!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.