Sarojini Naidu biopic: சுதந்திர போராட்ட வீராங்கனையும், கவிஞருமான சரோஜினி நாயுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில், 80ஸ் பிரபல ஹீரோயின் நிஷாந்தி நடிக்கிறார்.
சுதந்திர போராட்ட வீராங்கனையும், கவிஞருமான சரோஜினி நாயுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. சரோஜினி நாயுவின் கதாபத்திரத்தில், 80ஸ் பிரபல ஹீரோயின் நடிகை பானுப்பிரியாவின் சகோதரி சாந்திப்பிரியா நடிக்கவுள்ளார்.
சரோஜினி நாயுடு, கவிஞர், எழுத்தாளர், அறிஞர், சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் என்று பன்முகம் கொண்டு திகிழ்ந்தவர். இந்திய தேசிய காங்கிரஸில் முதல் பெண் தலைவராகவும் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தவர். இவர், உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளில் கற்று தேர்ந்தவர். இவரது, பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது.
சரோஜினி நாயுடு:
சரோஜினி நாயுடு அகோர்நாத் சடோபத்யாயா மற்றும் பரத சுந்தரி ஆகியோருக்கு 13 பிப்ரவரி 1879-ல் மூத்த பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவர், தனது 19-வது வயதில் பிராமணர் அல்லாத மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர், மார்ச் 2, 1949 அன்று மயங்கி விழுந்து மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
சுதந்திர போராட்டத்தில் சரோஜினி நாயுடு:
1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்ட போது, இவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். இவர், மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக, தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.
1925 ஆம் ஆண்டில் சரோஜினி நாயுடு காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சரோஜினி நாயுடு ஆவார்.
அக்டோபர் 2, 1942 ஆம் ஆண்டு சரோஜினி நாயுடு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படமாகும் சரோஜினி நாயுடு:
இவருடைய வாழ்க்கைக் கதை, வினய் சந்திரா இயக்கத்தில் திரைப்படமாக உருவாகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில்,சரோஜினி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நடிகை பானுபிரியாவின் சகோதரி சாந்திப் பிரியா நடிக்கவுள்ளார்.
இவர், தமிழில், எங்க ஊரு பாட்டுக்காரன், ஒன்று எங்கள் ஜாதியே, ரயிலுக்கு நேரமாச்சு, பூவிழி ராஜா, சிறையில் பூத்த சின்ன மலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தெலுங்கு, இந்தியிலும் நடித்திருக்கிறார். மேலும், இதில் சோனல் மொன்டீரோ, ஹிடன் தேஜ்வானி, ஜரினா வஹாப் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்கின்றனர்.