'பேபி நீ சுகரு'..பிக்பாஸ் லாஸ்லியா..குக் வித் கோமாளி அஸ்வினின்..ம்யூசிக் வீடியோ..

Kanmani P   | Asianet News
Published : Mar 30, 2022, 06:10 PM IST
'பேபி நீ சுகரு'..பிக்பாஸ் லாஸ்லியா..குக் வித் கோமாளி அஸ்வினின்..ம்யூசிக் வீடியோ..

சுருக்கம்

பிக்பாஸ் லெஸ்லியா - அஸ்வின் நடித்துள்ள 'பேபி நீ சுகரு' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிக்பாஸ் லாஸ்லியா : 

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்யா இந்நிலையில் தன்னுடைய சாதுர்யமான அணுகுரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர். ஒரே ஷோவில் அதிக பேமஸ் ஆனதும் இவர் தான். முன்பு தமிழ் மக்களுக்கு அறிமுகம் இல்லாத லாஸ்லியா இலங்கையில் பிரபல செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

கவினுடன் காதல் :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்த இவர் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக சுற்றித்திருந்தார். பின்னர் கவின் உடன் காதல் ஏற்பட்டு அதற்காக சாக்ஷியுடன் சண்டை என  சிறு கெட்டப்பெயரையும் சம்பாதித்த இவருக்கும் ஆர்மி உண்டு. பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் கவினுடன் காதல் தொடர்வாத கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..லாஸ்லியா ரசிகர்களுக்கு குட் நியுஸ்..!! அவரது தோழி வெளியிட்ட மகிழ்ச்சியான ரகசியம்..!!

நாயகன் அஸ்வின் :

குக் வித கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்த அஸ்வின் விளம்பர படங்களில் தோன்றும் மாடலாக பணியாற்றியவர். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியின் சிவாங்கியுடன் இவர் போட்ட லூட்டி ரசிகைகள் பட்டாளத்தை உண்டாக்கியது.  பின்னர் பட வாய்ப்புகளும் பெற துவங்கிய இவர் அவ்வப்போது ம்யூசிக் வீடியோவிலும் தோன்றுவார்.

என்ன சொல்ல போகிறாய் : 

பின்னர் என்ன சொல்லப் போகிறீர்கள் படத்தில் நடித்துள்ளார் அஸ்வின். இந்த படத்தில் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா என இரு நாயகிகள் ஆகியோர் நடித்துள்ளனர்.  புகழ் , டெல்லி கணேஷ் , சுப்பு பஞ்சு மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படம் கடந்த ஜனவரி 13 -ம் தேதி வெளியாகி சுமாரான விமர்சங்களை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...KoogleKuttapa song :கே எஸ் ரவிகுமாருடன் கைகோர்த்த பிக்பாஸ் தர்ஷன்,லாஸ்லியா..ஜீவியின் குரலில் வெளியானது அலை அலை

பேச்சு கொடுத்து மாட்டிக்கொண்ட அஸ்வின் :

தனது முதல் படமான என்ன சொல்ல போகிறாய் படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு வந்த அஸ்வின். இந்த பட இயக்குனரை பாராட்டுவதாக நினைந்து. இவரை தவிர  இதுவரை 40 இயக்குனர்களின் கதையை கேட்டு தூங்கியதாக பேசி வசமாக சிக்கி விழி பிதுங்கி போனார். பின்னர் மேடையை மறந்து நண்பர்களுடன் பேசுவது போல குறிவிட்டதாக மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் இவரின் பேச்சே படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு தந்தது. கூறினார். 

ம்யூசிக் வீடியோ :

தற்போது அஸ்வின்- லாஸ்லியா இருவரும் இணைந்து ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளனர். பேபி நீ சுகரு என்னும் ம்யூசிக் வீடியோவில் கல்லூரி மாணவர்களாக தோன்றுகின்றனர். பேராவல் டே அன்று லாஸ்லியாவிடம் அஸ்வின் காதலை சொல்லும் ரொமாண்டிக் பாடலாக இது அமைந்துள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?