2022ல் வெளியான படங்களில் புக் மை ஷோ முன் பதிவில் டாப் 5 இடங்கள் பிடித்த படங்களின் பட்டியல்!

By Rsiva kumarFirst Published Dec 24, 2022, 10:40 AM IST
Highlights

2022 ஆம் ஆண்டில் வெளியாகி புக் மை ஷோவில் முன் பதிவில் அதிக டாப் ரேட்டிங் பிடித்த படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

தமிழில் அடங்காமை முதல் மஹான், எப்.ஐ.ஆர், வலிமை, ஹே சினாமிகா, மாறன், மன்மதலீலை, ஹாஸ்டல், விக்ரம், ஓ2, பட்டாம்பூச்சி, டி பிளாக், யானை, விருமன், கோப்ரா, பொன்னியின் செல்வன் 1, லவ் டுடே என்று கிட்டத்தட்ட 200 படங்கள் வரையில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன. இதில் எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்ததா என்றால் இல்லை. 

பொன்னியின் செல்வன், விக்ரம், பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன், திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, வெந்து தணிந்தது காடு, விருமன் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக நல்ல வசூல் கொத்துள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் புக் மை ஷோ முன் பதிவில் டாப் 5 இடங்கள் பிடித்த படங்கள் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்...

நம்பர் 1: கேஜிஎஃப் சேப்டர் 2:

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. நூறு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.

எனக்கான விடுதலையை நான் தான் போராடி வாங்குவேன்: சேரன்!

நம்பர் 2: ஆர்ஆர்ஆர்:

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இந்த படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

நம்பர் 3: பீஸ்ட்:

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான படம் பீஸ்ட். தீவிரவாதத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் ரா ஏஜெண்டாக நடித்திருந்தார். வெறும் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்தது.

'வணங்கான்' படத்தை தொடர்ந்து... வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? ஷாக்கிங் தகவல்!
 

நம்பர் 4: பொன்னியின் செல்வன் 1:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான், சாரா அர்ஜூன், நாசர், நிழல்கள் ரவி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 30 ஆம் தேதி திரைக்கு வந்த வரலாற்று படம் பொன்னியின் செல்வன் பகுதி 1. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்த இந்தப் படம் ரூ.500 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

நம்பர் 5: டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்:

இயக்குநர் சாம் ரைமி இயக்கத்தில் எலிசபெத் ஆல்சென், சிவெடல் எஜோபேர், பெனெடிக்ட் வோங், பெனெடிக்ட் கம்பர்பேட்ஜ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மே 2 ஆம் தேதி திரைக்கு வந்த ஹாலிவுட் படம் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே... கணவர் பிரசன்னாவுடன் சினேகா ரொமான்டிக் போட்டோ ஷூட்! கலக்கல் போட்டோஸ்!

click me!