எனக்கான விடுதலையை நான் தான் போராடி வாங்குவேன்: சேரன்!

By Rsiva kumarFirst Published Dec 24, 2022, 9:45 AM IST
Highlights

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன், ஸ்ரீ பிரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் குடிமகன் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

ஒரு காலத்தில் பாரதி கண்ணம்மா, பொக்கிஷம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், திருமணம் என்று மாஸ் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சேரன். பெரும்பாலும் சேரனின் படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்திய படங்களாகவே இருக்கும். அதன் பிறகு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

 

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் குடிமகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஸ்ரீ பிரியங்கா, லால், வேல ராமமூர்த்தி, எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தமிழ் குடிமகன் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா..?

முழுக்க சாதியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பது கேள்விக்குறிதான். இது தொடர்பாக எத்தனையோ படங்கள் திரைக்கு வந்து விட்டன. அப்படியிருக்கும் போது சேரன் ஏன் மீண்டும் இது போன்று கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் என்பது தான் தெரியவில்லை. சேரன் படித்து முடித்து விட்டு விஏஓவாக அரசு அதிகாரியாக வருகிறார். ஆனால், அவரது குடும்ப தொழில் என்னவோ, இறந்தவர்களுக்கு மயானத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்யும் தொழில்.

அட.. துணிவு படத்துல இந்த பிக்பாஸ் சீசன் 6 பிரபலமும் நடிச்சிருக்காராம்பா- எச்.வினோத் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

விஏஓ ஆயிட்டா அப்புறம் யார் காரியம் செய்வது என்பது போன்றும், படிப்புக்கும், உனக்கும் என்ன சம்பந்தம், உனக்கு தான் இந்த தொழில் இருக்கிறது அல்லவா, கையை கட்டி, வாய பொத்தி வேலை பார்ப்பது எல்லாம் ஒரு தொழிலா, ஆலயத்தில் செஞ்சவன் அய்யனாகவும், ஆரம்பித்து வைத்தவன் அடிமையாகவும் ஆகிவிட்டான். உன்னோட சாதி உயர்ந்தது, என்னோட சாதி குறைந்ததா என்று வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலினம், ஆதிதிராவிடர், தலீத் என்று ஒன்றுக்கு ஒன்பது பெயர் இருந்தாலும், கீழ்ச்சாதி என்று சொல்லும் அடையாளம் மட்டும் இன்றும் மாறவில்லை. எனக்கான விடுதலையை நான் தான் போராடி வாங்க வேண்டும் என்பதற்காக உங்கள் முன்பு நிற்கிறேன் என்று சேரன் தமிழ் குடிமகன் படத்தில் வசனம் பேசுகிறார்.

Actor Mayi Sundar: வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

click me!