Divya bharathi : கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் திவ்ய பாரதி, மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த த்ரோபேக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பேச்சிலர். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. தனது எதார்த்த நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் திவ்ய பாரதி. இப்படத்தில் அவர் நடித்த சுப்பு கதாபாத்திரத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களும் கிடைத்தன.
பேச்சிலர் படத்தை தொடர்ந்து திவ்ய பாரதி நடிப்பில் உருவாகி உள்ள படம் மதில் மேல் காதல். வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. மதில் மேல் காதல் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ஒருபடம் ஹிட் ஆனதும் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய தனுஷ்... அதுவும் எத்தனை கோடி தெரியுமா?
இதையடுத்து மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க் என்கிற காதல் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. அப்படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இவர். இதுதவிர இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திவ்ய பாரதி.
இவ்வாறு கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு நீச்சல் உடை அணிந்தபடி ஆடிய த்ரோபேக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திவ்ய பாரதி. அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறனின் சிறந்த படைப்புகளின் பட்டியல் இதோ