பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷின் நானே வருவேன் ?

Published : Sep 03, 2022, 08:49 PM ISTUpdated : Sep 03, 2022, 08:50 PM IST
பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷின் நானே வருவேன் ?

சுருக்கம்

நானே வருவேன் படம் வெளியாகும் என யூகிக்கப்பட்ட அதே நாளில் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைக்கு வரவுள்ளது. 

தனுஷின் சமீபத்திய வெளியீடான 'திருச்சிற்றம்பலம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். இவர்களுடன் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் தோன்றி இருந்தனர். சிறு வயது தோழியை காதல் கரம் பிடிக்கும் நாயகனின் பயணம் குறித்த கதை களத்தை  இந்த படம் கொண்டிருந்தது. மித்ரம் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் - அனிரூத் கூட்டணி அமைந்திருந்தது. முன்னதாக படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றி கண்டது. சமீபத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியில் நல்ல வெற்றி கண்டிருந்தது.

 

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியை குறைத்து கொண்ட பிரியா பவானி சங்கர்..இதுவும் கிக்கா தான் இருக்கு..

இதை தொடர்ந்து தற்போது டோலிவுட்டில் வாத்தி, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார். இந்த இரு படங்களும் திரைக்கு தயாராகி வருகிறது. இதில்  செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கி வரும்'நானே வருவேன்' படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் ஊடகங்களில் பரவி வருகிறது. அதாவது இந்த படத்தின் ட்ரெய்லரை செப்டம்பர் 11ஆம் தேதியும், பட செப்டம்பர் 30ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வாவ்..அழகான உடையில் ...பார்ப்பவர்களின் மனதை கவரும் நிவேதா பெத்துராஜ்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டது என்றும். இதில் செல்வராகவன் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும்  நானே வருவேனில், இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு...நிகழ்ச்சி மேடையில் மாமியாரின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சாந்தனு...

இதற்கிடையே நானே வருவேன் படம் வெளியாகும் என யூகிக்கப்பட்ட அதே நாளில் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைக்கு வரவுள்ளது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த இரு படங்கள் மோதவுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!