இன்று இயக்குனர் வெற்றி மாறன் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் இயக்கத்தில் மெய்சிலிர்க்க வைத்த படங்களின் தொகுப்புகளை இங்கு காணலாம்.
தேசிய விருது இயக்குனரான வெற்றிமாறனின் மீது தென்னிந்திய ரசிகர்களுக்கு ஒரு தனி கண்ணோட்டமே உண்டு. இவரின் திரைப்படங்களில் ஆழமான உணர்வுகள் பொதிந்திருக்கும் என்கிற நம்பிக்கையும் சினிமா திரையுலகில் பரவிக் கிடக்கிறது. பொல்லாதவன் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான வெற்றிமாறன் நாவலாசிரியராகவும் இருந்து வருகிறார். தேசிய விருது உட்பட பல விருதுகளை தன் சொந்தம் ஆக்கிய அசுர இயக்குனரான இவரின் படைப்புகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. அதோடு நின்று பேசும் திறன் கொண்டவையாகவே இருந்தது வருகிறது.
இன்று இயக்குனர் வெற்றி மாறன் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் இயக்கத்தில் மெய்சிலிர்க்க வைத்த படங்களின் தொகுப்புகளை இங்கு காணலாம். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் பாடம் கற்றுக் கொண்ட வெற்றிமாறன் தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டார். அப்போது வெளியான அது ஒரு கனா காணும் என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய போது தனுசுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தார் இயக்குனர் அந்த அறிமுகத்தில் தான் உருவானது பொல்லாதவன். முன்னதாக தொடர் தோல்விகளை சந்தித்த தனுஷுக்கு புதிய கூட்டணி ஒரு திருப்புமுனையை கொடுக்கும்என்கிற நம்பிக்கையில் இருந்தார்.
பொல்லாதவன் :
மேலும் செய்திகளுக்கு...ஒருபடம் ஹிட் ஆனதும் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய தனுஷ்... அதுவும் எத்தனை கோடி தெரியுமா?
அதன்படி வெற்றிமாறனுடன் கைகோர்த்த தனுஷ் பொல்லாதவன் படத்தின் மூலம் மிகுந்த பாராட்டுகளை தட்டிச் சென்றார். இவரது முதல் படத்தில் தனுஷ் மூலம் அறிமுகமான ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இறுக பற்றிக்கொண்ட வெற்றிமாறன் இன்று வரை அவருடனான பணியை தொடர்ந்து வருகிறார். துணை இயக்குனராக இருந்த காலத்தில் தன்னுடன் அறையில் தங்கி இருந்த ஒருவரது இருசக்கர வாகனம் தொலைந்து போக, அதை தேடி கண்டுபிடிக்க முயல்கையில் கிடைத்த அனுபவங்களின் ஒட்டுமொத்த சுவாரசியமாகவே பொல்லாதவன் எனஇயக்குனர் முன்பு தெரிவித்து இருந்தார். தனது இரு சக்கர வாகன மீது அதீத காதல் கொண்ட நாயகன் அந்த வாகனத்தை இழந்த பின் அதற்காக போராடும் கதைக்களத்தை கொண்ட பொல்லாதவன் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து சிறந்த இயக்குனராக வெற்றிமாறனை உருவாக்கியது.
ஆடுகளம் :
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் பரிசு... சர்ப்ரைஸ் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த விடுதலை டீம்
இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியானது ஆடுகளம் மீண்டும் தனுசுடன் கைகோர்த்த வெற்றிமாறன் தனுஷை வேறொரு கோணத்தில் சித்தரித்தார். சேவல் சண்டை தொடர்பான கதைக்களத்தை கையில் எடுத்த வெற்றிமாறன் இந்த விளையாட்டில் தொடர்புடையவர்களை உடன் நெருங்கி பழகி அதன் ஒவ்வொரு அணுவையும் ஆராய்ந்து ஆடுகளத்தை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் தான் டாப்ஸி அறிமுகமானார். நாம் முன்பு கண்ட நாயகன் இந்த படத்தில் லுங்கியும் பணியனுமாய் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். சேவலும் நாயகனுமாய் சினிமாவில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்த வெற்றிமாறன் தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை தனது சொந்தம் ஆக்கினார். இவர் இயக்கிய இரண்டு படங்களும் வெற்றி கண்டதால் வெற்றிமாறன் மீது தமிழ் திரை உலகத்தினரின் கவனம் திரும்பியது. ஆனாலும் அதை தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு இவர் எந்தப் படங்களையும் இயக்கவில்லை.நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன் உள்ளிட்ட படங்களுக்கு வெறும் வசனம் மட்டுமே எழுதிக் கொடுத்திருந்தார்.
காக்கா முட்டை :
5 வருட இடைவெளிக்குப் பிறகு காக்கா முட்டை வெளியானது பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு ஏழை சிறுவர்களின் உணர்வுகளை கண்முன் நிறுத்தினார் இயக்குனர் வெற்றி மாறன். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மாவாக வந்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஏழை சிறுவர்களின் ஒவ்வொரு உணர்வையும் சித்தரித்த இந்தப் படமும் பல விருதுகளை தன் சொந்தமாகியது.
இதையும் படியுங்கள்... எது மாஸ்... மக்கள் சொல்லட்டும் - தனுஷை வம்பிழுத்தாரா சிம்பு... STR-ன் பேச்சு சர்ச்சையானதன் பின்னணி இதுதான்
விசாரணை :
இதைத்தொடர்ந்து அட்டைக்கத்தி தினேஷை வைத்து விசாரணை என்னும்படைப்பை உருவாக்கினார். தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ், கிஷோர் என பலரும் நடித்திருந்த இந்தப் படம் குற்ற நாடகத் திரைப்படமாக அமைந்து பாராட்டுகளை தட்டிச் சென்றது. ஆந்திர மாநிலத்திற்கு வேலை தேடிச் செல்லும் தமிழ் இளைஞர்கள் போலீஸிடம் சிக்கிக் கொண்டு படும் இன்னல்களை சித்தரித்து விவரித்து இருந்தது இந்த படம். இதுவும் தமிழ் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றது.
வடசென்னை :
இதைத்தொடர்ந்தும் மீண்டும் இரண்டு வருட கால இடைவெளி விட்டார் இயக்குனர். அந்த இரண்டு வருட காலத்தில் கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜெய் உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் தனுசுடன் வடசென்னை என்னும் படம் அமைந்தது. இந்த படத்தில் வடசென்னை பகுதிகள் இருக்கும் இளைஞன் குறித்த கதைகளம் அமைந்திருந்தது. இதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது.
அசுரன் :
2019 ஆம் ஆண்டு இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் கதைக்களமாக அமைந்திருந்தது. நாவலில் அதிக ஆர்வம் கொண்ட வெற்றிமாறன் கதை சொல்லும் பாணியில் இயக்கி இருந்த அசுரன் படம் தனுசுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்றே கூறலாம். இந்தப் படம் தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை குவித்தது. வயதான தந்தையாக இதில் நடித்து தனுஷ் நடிப்பில் பல பரிமாணங்களை பிரதிபலித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பாவக்கதைகள் என்னும் அந்தாலஜிகள் ஊர் இரவு என்னும் ஒரு பகுதியை இயக்கி இருந்தார். பின்னர் விஜய் சேதுபதி நடித்த சங்கத் தலைவன் என்னும் படத்தை தனது பேனரின் கீழ் தயாரித்தார்.
விடுதலை :
தற்போது வெற்றிமாறன் நகைச்சுவை நடிகரான சூரியை நாயகனாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். அதன்படி உருவாகி வருகிறது விடுதலை. இந்த படத்தில் போலீசாக நடிக்கிறார் சூரி. இவருடன் விஜய் சேதுபதி கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் வர உள்ளனர். நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு வரும் விடுதலை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிகிறது. இந்தப் படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனை தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் விடுதலையும் ஒன்றாகும். தற்போது வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் அதிகாரம் ஆகிய இரு படங்களை இயக்கும் திட்டத்தில் முனைப்பாக உள்ளார்.