Latest Videos

இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு! 'பாக்கியலட்சுமி' நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!

By manimegalai aFirst Published Jun 19, 2024, 2:39 PM IST
Highlights

'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர் சதீஷ் அவ்வப்போது, இந்த சீரியல் குறித்த அப்டேட் தெரிவித்து வரும் நிலையில்... தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், அணைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி மவுசுதான். காரணம் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்காமல் ஏதேனும் வித்தியாசத்தை புகுத்தி மக்களுக்கு எளிதில் சென்றடையும் விதத்தில் வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவி தொடர்கள் இருக்கும்.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரை ஐ டேவிட் என்பவர் இயக்க, இந்த சீரியலில் தெலுங்கு சீரியல் நடிகை சுசித்ரா ஷெட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சதீஷ்குமார் நடிக்க ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் ரஞ்சித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!

இவர்களை தவிர ராஜலட்சுமி, எஸ் டி பி ரோசரி,  திவ்யா கணேசன், நேகா மேனன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் கதைக்களம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கிவிட்டது. பேரன் -  பேத்திகள் எடுத்த வயதில் கோபிக்கு, ராதிகா மூலம் குழந்தை பிறக்க உள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு அவரின் வீட்டுக்கே சென்ற நிலையில்... கூடவே தன்னுடைய அம்மாவையும் அழைத்து சென்றார். அங்கு ராதிகாவின் அம்மாவுக்கும் கோபியின் அம்மாவுக்கும் நடந்த பிரச்சனைகள் பரபரப்பின் உச்சம்.

மேலும் ராதிகாவின் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என ஈஸ்வரி கூறிய நிலையில்... ராதிகா எதேர்ச்சியாக கீழே விழுந்து அவர் வயிற்றில் அடிபட்டு கரு கலைந்து விட்டதற்கு காரணம் ஈஸ்வரி தன்னை தள்ளிவிட்டது தான் என பழிபோட, அதை அப்படியே நம்பும் கோபி இனி வரும் எபிசோடில் ராதிகாவின் பேச்சை கேட்டுக்கொண்டு ஈஸ்வரியை வெளியே அனுப்புவார் என தெரிகிறது.

ரேணுகாசாமியை மர்டர் செய்து விட்டு நண்பருடன்பார்ட்டி செய்த தர்ஷன்! கொலை வழக்கில் மற்றொரு நடிகருக்கும் தொடர்பா?

எதிர்பார்க்க முடியாத பல ட்விட் அண்ட் டர்ன்ஸுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்த ஒரு முக்கிய செய்தியை தற்போது வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் சதீஷ். அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது, பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் மீண்டும் ஆரம்பிச்சாச்சு. கதையில நிறைய ட்விஸ்ட் அண்ட் திரில்லிங் எல்லாம் இருக்க போகுது. மனசுக்கு ரொம்ப நெருடலான விஷயங்கள் எல்லாம் நடக்க போகுது, என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் என்ஜாய் பண்ணுவீங்க என்று நினைக்கிறேன். அதேபோல் கடந்த வார எபிசோட் குறித்து நூற்றுக்கணக்கான மெசேஜ் எனக்கு வந்தது. அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் கோடி நன்றிகள். இன்னும் பெட்டர் லெவல் வில்லனாகவும், காமெடியனாகவும் நடிக்க ட்ரை பண்ணுகிறேன். உங்களின் அன்பு ஆதரவு தான் இதற்கு மிகப்பெரிய மோட்டிவேஷன் என கூறியுள்ளார்.

 

click me!