Latest Videos

ரேணுகாசாமியை மர்டர் செய்து விட்டு நண்பருடன்பார்ட்டி செய்த தர்ஷன்! கொலை வழக்கில் மற்றொரு நடிகருக்கும் தொடர்பா?

By manimegalai aFirst Published Jun 19, 2024, 12:38 PM IST
Highlights

கன்னட நடிகர் தர்ஷன், தன்னுடைய ரசிகர் ரேணுகா சாமியை கொலை செய்த வழக்கில்... தற்போது மற்றொரு நடிகருக்கும் தொடர்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பவித்ரா கௌடாவுடன் தொடர்பு:

கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம், பிரபல நடிகர் தர்ஷன் தன்னுடைய ரசிகர் ரேணுகா சாமியை கவலை செய்த விவகாரம். தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை இருக்கும் நிலையில்... கடந்த பத்து வருடமாக பவித்ரா கௌடா என்கிற நடிகையுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார்.

45 வயசுல மேரேஜ் பண்ணி... 25 வயசு மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் பிரேம்ஜி! சிக்கிள்ஸை வெறியேற்றும் போட்டோஸ்!

ஆபாச மெசேஜ்:

தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசாமி, அவரின் வாழ்க்கையை கெடுத்து வந்த பவித்ரா கௌடா மீது கோபம் கொண்டு, எப்படியோ பவித்ராவின் செல்போன் நம்பரை வாங்கி  அவரை ஆபாசமாக திட்டியும் சில ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார். இதனால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான பவித்ரா கௌடா இந்த விஷயம் குறித்து தன்னுடைய ஆசை காதலன் தர்ஷனிடம் கூற... பிரச்சனை இங்கு தான் ஆரம்பித்துள்ளது.

Nayanthara: விக்னேஷ் சிவனுடன் லன்ச் டேட் சென்ற நயன்தாரா! மதிய நேரத்தில் கூட No பூவா! வெளியான ஃபிட்னஸ் சீக்ரெட்

பெங்களூர் வந்த ரேணுகாசாமி:

ரேணுகா சாமியை தொடர்பு கொண்ட தர்ஷன், அவரை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி ரேணுகா சாமி கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்தார். பின்னர் 2:30-மணி அளவில் காமக்ஷிபாளையா காவல்நில எல்லைக்குள், இவரை தர்ஷனின் பவுன்சர்கள் அழைத்து சென்ற சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Pudhu Vasantham: இது தான் விஷயமா? சன் டிவி புதுவசந்தம் சீரியல் குழுவின் உற்சாக கொண்டாட்டம்! குவியும் வாழ்த்து!

கொடுமை:

ரேணுகா சாமி பவுன்சர்களால் அழைத்துச் செல்லப்பட்டு ஷெட் ஒன்றில் அடைத்து மோசமான வகையில் அவரை தாக்கியது மட்டும் இன்றி மின்சாரத்தை உடலில் செலுத்தியும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.  பின்னர் தர்ஷன் அந்த ஷெட்டுக்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ரேணுகா சாமி, தர்ஷன் முன்பு தான் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவசர அவசரமாக ரேணுகா சாமி உடலை அப்புறப்படுத்தப்பட்டது.

தர்ஷன் கைது:

ஆரம்பத்தில் இது ஒரு தற்கொலை வழக்காகவே பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் ரேணுகா சாமி உடலில் இருந்த காயங்களை வைத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இந்த வழக்கை தோண்ட தோண்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர துவங்கியது. தற்போது தர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டில் உள்ளார்.

சிக்கண்ணாவுடன் பார்ட்டி:

இது ஒருபுறம் இருக்க, இந்த கொலை வழக்கில் மற்றொரு கன்னட நடிகரான சிக்கண்ணா தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிக்கண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரையே மேலும் சிக்கண்ணாவும், தர்ஷனும், கொலைக்கு முன்னரும், கொலை நடந்த பின்னரும்... பாரில் ஒன்றாக இணைந்து குடித்து கும்மாளம் போட்டுள்ளனர். ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட ஷெட்டுக்கு தர்ஷனுடன் சிக்கண்ணாவும் இருந்ததாக கூறப்படுவதால்... இவருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!