அசீமை அடிக்க செருப்பை கழட்டிய ஆயிஷா..! பிரச்சனையால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு..!

By manimegalai a  |  First Published Oct 21, 2022, 7:59 PM IST

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்று தற்போது, மிகபெரிய ப்ரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
 


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்ட இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியே செல்வார் என்பது புரியாத புதிராக இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று தனலக்ஷ்மிக்கும் - அசல் கோளாறுக்கும் இடையே சண்டை வெடித்தது. இதை என்ன என்று விசாரிக்க சென்ற, விக்ரமனும் - அஸீமும் மோதி கொண்டனர். இடையில் ஜிபி முத்து சமாதானம் செய்ய வந்து இவர்கள் இடையில் சிக்கினார். பின்னர் ஒருவழியாக இந்த சண்டை முடிவுக்கு வந்த நிலையில், இன்றிய சண்டை செருப்பை கழட்டும் அளவிற்கு சென்றுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் செய்திகள்: 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!

போட்டியாளர்கள் ஒன்று முதல் 13 வரை உள்ள ரேங்கிங் அடிப்படையில் நிற்கின்றனர். அதில் 13-வது இடம் பிடித்த அசீம், ஒன்றாம் இடத்தில் உள்ள மகேஸ்வரி, ஆறாவது இடத்தில் உள்ள விக்ரமன், 9-வது இடத்தில் உள்ள ஆயிஷா ஆகியோர் தகுதி இல்லாதவர்கள் என கூறுகிறார். இதை கேட்டு கொந்தளித்த ஆயிஷா தகுதியே இல்லை என கேட்டு குரலை உயர்த்தி பேசுகிறார். ஏன் குரலை உயர்த்துகிறாய் என கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. 

மேலும் செய்திகள்: நான்கு காலங்களில் நடைபெறக்கூடிய காதல் 'காலங்களில் அவள் வசந்தம்' பட நாயகன் கௌஷிக் ராம் பகிர்ந்த தகவல்!
 

ஒரு நிலையில் அசீம் ஆயிஷாவை போடி... என கூறியதும் அவருக்கு கோபம் கொப்பளிக்கிறது. இதுவே ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகிறது. இடையே போடி என சொல்வது என கூற வந்த விக்ரமன் மீதும் எகிறுகிறார் அசீம். பிரச்சனை தீவிரமடைய, அசீமை அடிக்கடி காலில் உள்ள செருப்பை கழட்டுகிறார் ஆயிஷா. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. அசீம் செய்தது தவறு என்று அவருக்கு எதிராக பலர் பதிவு போட்டு வருகிறார்கள்.

அதே போல், விக்ரம் மீது... ஏதோ கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இவர் இந்த வாரம் முழுவதும் நடந்து கொள்வதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். நாளைய தினம் இந்த பிரச்சனைகள் குறித்து விசாரிக்க வரும், கமல் அசீமின் செயலுக்கு சாட்டையடி கொடுப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Violance Part
Azeem and Ayeesha pic.twitter.com/57XUTEopoQ

— GP Muthu Army (@drkuttysiva)

 

click me!