மாப்பிள்ளை மரியாதை கிடைக்காமல் அசிங்கப்படும் கோபி..இன்றைய எபிசோட்

Published : Oct 21, 2022, 07:12 PM IST
மாப்பிள்ளை மரியாதை கிடைக்காமல் அசிங்கப்படும் கோபி..இன்றைய எபிசோட்

சுருக்கம்

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்.....

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி பல கனவுகளுடன் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆனால் அதில் எதுவும் இவருக்கு கைகூடவில்லை. முன்னதாக கொடைக்கானல் சென்று இருந்த கோபி தனது புது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிற திட்டம் போட்டு இருந்தார். ஆனால் அங்கும் என்ட்ரி கொடுத்த குடும்பத்தார் இவரை வைத்து செய்து விட்டனர்.

இதனால் ராதிகா மிகவும் கடுப்பானதுடன் அவர்களை பழிவாங்கியே  தீருவேன் என்கிற திட்டத்திற்கு வந்துவிட்டார். நேற்று அனைவரும் ஊர் திரும்பி விட்டனர்.  வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி குடும்பத்தாருக்கு ஜெனி சமைக்கும் படலம் சென்றது. இன்று ராதிகாவின் வீடு காட்டப்படுகிறது. பாத்ரூமில் இருந்தபடி துண்டு கேட்டு கோபி கத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் ராதிகா, அவரின் அம்மா, அண்ணன் என யாரும் கோபியை  சட்டை செய்யாமல் எனக்கு என்ன என அமர்ந்திருக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...கர்ப்பமாக இருக்கும் சந்தியா? போலீஸ் கனவை வெல்வார்? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

இதையடுத்து துண்டை தேடிப் பார்த்துவிட்டு தனது வேட்டியால் தலையை துடைத்துக் கொண்டு வருகிறார் கோபி. பின்னர் காபி கேட்க மிகவும் மோசமான டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார் ராதிகாவின் அம்மா. அந்த வீட்டில் சௌடாலாக இருந்து அதிகாரம் செய்து வந்ததையும் நினைத்து கோபி தற்போது மன வருத்தபடுகிறார்.  அந்த நிலையில் ரூமிற்கு வரும் ராதிகா உங்கள் குடும்பத்தார் என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு...லோஹிப் பேன்ட் அணிந்து வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சட்டப்படியும், நியாயப்படியும் நான் எந்த தவறும் செய்யாதவள். நீங்கள் தானே உங்கள் குடும்பத்தை பிடிக்கவில்லை என வந்து விட்டீர்கள். அவர்கள் நம்மை அசிங்கப்படுத்தியதால் அவர்கள் முன் கௌரவமாக வாழ்ந்து காட்ட வேண்டும் இதை மட்டும் எனக்கு செய்யுங்கள் என கேட்கிறார். கோபி ஒன்றும் சொல்லாமல் நிற்கிறார். முன்னதாக ஜெனி சமைத்த உணவை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நீ தான் சமைத்தாயா என பாராட்டவும் செய்கிறார்கள். இந்த நிலையில் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்யாவிடம் ஜெனி அங்கிளை அங்கே பார்த்தபோது உங்களுக்கு கோபம் வரவில்லையா? என கேட்க எனக்கு பழகிவிட்டது எனக் கூறுகிறார் பாக்யா. பின்னர் பாக்கியா சமைப்பதற்காக  சமையல் ரூமுக்கு செல்ல அங்கு ஹோட்டல் கவர்கள் இருப்பதை பார்க்கிறார். இது என்ன என கேட்க ஜெனி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!