bharathi kannamma : பாரதி கூறிய உண்மையால் விபரீத முடிவெடுக்கும் ஹேமா..புது திட்டம் போடும் வெண்பா

Published : Oct 20, 2022, 05:47 PM IST
bharathi kannamma : பாரதி கூறிய உண்மையால் விபரீத முடிவெடுக்கும் ஹேமா..புது திட்டம் போடும் வெண்பா

சுருக்கம்

திருமணத்தின் போது மண்டபத்தை விட்டு வெளியேறி எனக்கு பிடித்த பாரதியை திருமணம் செய்து கொள்வேன் என புதிய திட்டம் ஒன்றை தீட்டி விடுகிறார்.

பாரதி கண்ணம்மாவில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இன்றைய எபிசோடில் பாரதியிடம் ஹேமா என்னுடைய அம்மா யார் என கேட்டு அடம்பிடிக்கிறார். அப்போது பாரதியின் முன்னாள் காதலி ஹேமாவின் தாயார் தனது மகளுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறார். அப்போது பாரதி உங்களது பெண் ஹேமாவும் நானும் காலேஜ்மெட்ஸ்.  அவளை நன்றாக எனக்குத் தெரியும். மற்றவை எல்லாம் நான் வீட்டிற்கு வந்த சொல்லுகிறேன். உங்கள் பெண்ணின் நினைவாகத்தான் என் மகளுக்கு ஹேமா என பெயர் வைத்தேன் என கூறுகிறார்.

இதையடுத்து ஹேமா பாரதியிடம் என் அப்பா நீங்கள் என்றால்? என் அம்மா யார்? ஏன் என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் பாரதி பலவற்றை கூறி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் ஹேமா எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல்,  அடம் பண்ணிக் கொண்டே இருக்கிறார்.  நீங்கள் என் அப்பா என்றால், உங்களுக்கு என் அம்மாவை தெரியும் அவர் யார் என சொல்லுங்கள் என அழுகிறார்.  மிகவும் அழுது அடம் செய்வதால் உண்மையை போட்டு உடைகிறார்  பாரதி. 

மேலும் செய்திகளுக்கு...முடியால் சிக்கிய சந்தியா..ஒருபுறம் மாமியார்..ஒருபுறம் அதிகாரி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

உன் அம்மா யார் என எனக்குத் தெரியாது. நான் உன்னுடைய அப்பா கிடையாது. என உண்மையை கூறுகிறார். இதனால் சௌந்தர்யா அதிர்ச்சியாகி நிற்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஹேமா நான் என் அம்மாவை கண்டுபிடித்துக் கொள்கிறேன். இந்த வீட்டை விட்டு செல்கிறேன் என அழுது கொண்டே கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரளயம் வெடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பக்கம் வெண்பா கூலாக திருமண போட்டோ சூட்டுக்கு ரெடி ஆகி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு....baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்

கேமரா மேனிடம் எந்த உடைய அணிந்தால் பக்காவாக இருக்கும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் வெண்பா. இதை பார்த்த வெண்பாவின் அம்மா மற்றும் ரோஹித் உண்மையிலேயே வெண்பா மாறிவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் வரும் சாந்தி, நீங்கள் உண்மையிலேயே மாறிவிட்டீர்களா என்று வெண்பாவிடம் கேட்க, இல்லை நான் மாறுவதா? திருமணம் வரைக்கும் நான் இப்படித்தான் நடித்துக் கொண்டே இருப்பேன், திருமணத்தின் போது மண்டபத்தை விட்டு வெளியேறி எனக்கு பிடித்த பாரதியை திருமணம் செய்து கொள்வேன் என புதிய திட்டம் ஒன்றை தீட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!