முடியால் சிக்கிய சந்தியா..ஒருபுறம் மாமியார்..ஒருபுறம் அதிகாரி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

Published : Oct 20, 2022, 05:32 PM IST
முடியால் சிக்கிய சந்தியா..ஒருபுறம் மாமியார்..ஒருபுறம் அதிகாரி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

சுருக்கம்

அடுத்ததாக சந்தியாவுக்கு மல்டி டாஸ்க் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட, அந்த நேரத்தில் சந்தியா மயங்கி விழுகிறார்.

விஜய் டிவியில  ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல கருத்துக்களை பதிந்து வருவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். படிக்காத ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரின் கனவை நிறைவேற்ற முயலும் நாயகனின் கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த வகைகள் சந்தியா ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளையும் கடந்து போலீஸ் ட்ரைனிங்கிற்கு சென்று விட்டார்.

போலீஸ் அதிகாரி முடியை வெட்ட சொல்ல தனது குடும்பத்திற்கு பயந்து அவர் முடியை வெட்டவில்லை. இன்றைய எபிசோடில் , வீடியோ காலில் அனைவரும் சந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது சந்தியா கேப் அணிந்திருப்பதால் அவரது முடி தெரியவில்லை. இதை சாக்காக வைத்து அர்ச்சனா, சந்தியா முடியை வெட்டி விட்டாள் எனக் கூற, சிவகாமி சரவணனிடம் கேட்கிறார்.சரவணன் தனது மனைவி முடியை வெட்டவில்லை என்பதை உறுதி செய்கிறார். 

மேலும் செய்திகளுக்கு....baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்

பின்னர் சந்தியாக குத்து சண்டையில் ஜெயிக்கிறார். இதையடுத்து  சந்தியாவை பார்க்கும் மேலதிகாரி தொப்பியை கழட்டும்படி கூற, சந்தியா முடி வெட்டாததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். பின்னர் தான் முடியை வெட்டாதது குறித்து மன்னிப்பு கேட்டதோடு இனி எந்த தவறும் நடக்காது என கூறுகிறார்  சந்தியா.  அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் சின்ன தப்பு செய்தாலும் பெரிய பனிஷ்மென்ட் கொடுக்கப்படும் என மிரட்டுகிறார் போலீஸ் அதிகாரி.

மேலும் செய்திகளுக்கு...Janhvi Kapoor : கண்ணா பின்னாவென கட் செய்த உடையில் ஜான்வி கபூர்...நியூ லுக் போட்டோஸ் இதோ

இந்த பக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் குழந்தையை கொண்டு வந்த சிவகாமியிடம் கொடுக்கிறார்கள். அந்தக் குழந்தையை அனைவரும் கொஞ்சுகிறார்கள். அப்போது அர்ச்சனா இதுதான் உங்கள் உண்மையான பேத்தி என மனதுக்குள் சொல்லுகிறார். அடுத்ததாக சந்தியாவுக்கு மல்டி டாஸ்க் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட, அந்த நேரத்தில் சந்தியா மயங்கி விழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?