priya prince : பிரமாண்ட பார் செட்டப்புடன் கட்டப்பட்ட வீடு..மாஸ் காட்டும் கண்ணான கண்ணே சீரியல் நடிகை

By Akshit Choudhary  |  First Published Oct 18, 2022, 7:35 PM IST

டெல்லியில் இருந்து சேர்களை ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ள பிரியா, கிச்சனுக்கு அருகிலேயே ராயல் லுக்கில் பார் ஒன்றையும் செட்டப் செய்துள்ளார்.


சன் டிவியில்  பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பிரியா ஃப்ரெண்ட்ஸ் தந்தை மகளுக்கு இடையிலான உறவை பிரதிபலிக்கும் இந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் இதில் முக்கிய நூலில் பப்லு நடிக்கிறார் சமீபத்தில் என்று கொடுத்த பிரியா பிரின்ஸி. சமீபத்தில் நாடகத்திற்குள் வந்த இவர் வில்லியாக ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்.

இவர் முன்னதாக செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நட்சத்திரமாக இருந்தவர். இதைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு சென்று விட்டார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவருக்கு ஒரு மகள் உள்ளார். பசங்க திரைப்படத்தின் மூலம் திரைக்கு என்ட்ரி  கொடுத்த பிரியா பிரின்ஸி தன் பெயரில் தனியாக யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த வயதிலும் இளமை தோற்றத்துடன் இருக்கும் இவர் அவருடைய youtube சேனல் மூலம் தனது அழகு ரகசியங்களை தெரிவித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு... Dhivya dharshini : சட்டையில் பல அர்த்தம் சொல்லும் விஜய் டிவி டிடி...க்யூட் போட்டோஸ் இதோ

அந்த வகையில் தற்போது புதிய வீடு ஒன்றை கட்டி உள்ள பிரியா பிரின்ஸி. தனது youtube - ல் வீடியோவுடன் தனது வீடு குறித்த பல சீக்ரெட்களையும் பகிர்ந்துள்ளார். அதாவது தனது கனவு வீட்டிற்கு  கதவு சோபா ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கியுள்ளதாகவும், டெல்லியில் இருந்து சேர்களை ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ள பிரியா, கிச்சனுக்கு அருகிலேயே ராயல் லுக்கில் பார் ஒன்றையும் செட்டப் செய்துள்ளார். கனவு வீட்டை அடைய பல கஷ்டங்களை தாண்டி அடைந்துள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். சூட்டிங்கிற்கு வாடகைக்கு விடவும் விருப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு... Diwali 2022 TV Special Movies : தீபாவளிக்கு டிவியில் என்ன படம்?...இதோ சின்னத்திரை மூவி லிஸ்ட்

 

click me!