கோபியின் நண்பன், கோபியின் மனைவி பாக்கியா என அழைக்க மேடைக்கு செல்கிறார் பாக்கியா. இதனால் கடுப்பாகிறார் ராதிகா.
விஜய் டிவிகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ஹனிமுனுக்காக வந்திருக்கிறார் கோபி. அவர் வந்த அதே இடத்திற்கு பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினரும் வந்துள்ளனர். தற்போது இந்த சீரியலில் மகா சங்கமும் நடந்து வருகிறது. கோபியை ராதிகாவுடன் பார்த்த மூர்த்தி, கண்ணன் உள்ளிட்ட பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் ஆத்திரமடைய அவர்களை பாக்கியலட்சுமி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்.
அதற்கிடையே கோபியை கடுமையாக அவ்வப்போது பாடல்கள் மூலம் தாக்கி வருகிறார் கோபியின் தந்தை. போட்டிங்கிற்கு குடும்பம் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் ராமமூர்த்தி மற்றும் கண்ணன் மட்டுமே கரையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கோபியும் ராதிகாவும் வர அவர்களை கடுமையாக பேசி விரட்டி விட்டனர். இதன் பின்னால் ஜீவா, மீனா இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் கண்ணன் வீடியோ கால் செய்கிறார். தொடர்ந்து ஜீவா கடைக்கு கிளம்பி விடுகிறார். மூன்று குடும்பங்களும் ஒரே இடத்தில் சுற்றி பார்க்கின்றனர். அப்போது வீடியோ கால் பேசும் இனியா படிக்கட்டில் இருந்து தவறி விழப்போக கோபி காப்பாற்றுகிறார்.
மேலும் செய்திகளுக்கு...goodbye : அமிதாப் பச்சன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை ..குட் பை நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அவரைக் கண்டு இனியா எரிச்சல் அடைய ஈஸ்வரி வந்து கண்டவான் கிட்டயெல்லாம் என்ன பேச்சு நீ போ என கூறுகிறார். கோபி அதிர்ச்சி அடைகிறார். அம்மாவிடம் ஏன் அப்படி கூறினீர்கள் என கேட்கிறார். அதற்கு அவ முன்னாடி தானே கல்யாணம் பண்ண, இனிமேல் அம்மா அப்படி கூப்பிடாத, மண்டபத்துல பார்த்த அன்னைக்கே நீ என் பிள்ளை இல்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன் என திட்டி விட்டு செல்கிறார் ஈஸ்வரி.
மறுபக்கம் பாக்கியவை - கடுமையாக விமர்சிக்க அப்போது அங்கு வரும் மூர்த்தி டென்ஷன் ஆகிறார். ஆனால் பாக்யா "நான் நடிக்கவில்லை அதனை நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை, நான் வேண்டாம் என்று சொன்னவரை தான் நீங்கள் கல்யாணம் பண்ணி இருக்கீங்க அதனால எனக்கு எந்த பதட்டமும் இல்லை என சொல்கிறார்.பின்னர் ரூமுக்கு வரும் கோபி, தப்பு தான் என சொல்லி சரண்டர் ஆகிறார். ராதிகா உங்க அப்பா ஏன் இப்படி இருக்காங்க என கேட்க, பார்த்தியா நல்ல குடும்பம் என்று சொன்னாயே எங்க அப்பா எப்படி எல்லாம் என்னை டார்ச்சர் பண்றார்னு பார்த்தியா என தன்னை நல்லவராக நிரூபித்துக் கொள்ள பார்க்கிறார் கோபி.
மேலும் செய்திகளுக்கு...Ramya Krishnan : 50 களை கடந்தும் குறையாத அழகு...ரம்யா கிருஷ்ணனின் நியூ லுக் போட்டோஸ்
பின்னர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ராதிகாவுடன் கோபி கலந்து கொள்ள பாக்யா ராமமூர்த்தியுடன் பங்கேற்கிறார். அப்போது கோபியின் நண்பன், கோபியின் மனைவி பாக்கியா என அழைக்க மேடைக்கு செல்கிறார் பாக்கியா. இதனால் கடுப்பாகிறார் ராதிகா. பின்னர் பெயரை குறிப்பிடாமல் கோபியை விமர்சிக்கிறார் பாக்கியா இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது