ரச்சிதாவுக்கு நூல் விட்ட ராபர்ட்..ராமை காதலிக்கும் மகேஸ்வரி..கொளுத்தி போடும் பயில்வான்

Published : Oct 15, 2022, 02:34 PM ISTUpdated : Oct 18, 2022, 10:50 AM IST
ரச்சிதாவுக்கு நூல் விட்ட ராபர்ட்..ராமை காதலிக்கும் மகேஸ்வரி..கொளுத்தி போடும் பயில்வான்

சுருக்கம்

ராமிடம் நெருங்கி பேசும் மகேஸ்வரி தன்னை பற்றி என்ன நினைப்பதாக கேட்டுள்ளார். இப்படி தான் காதல் ஆரம்பிக்கும் எனவும் புதிய தீப்பொறி ஒன்றை கொளுத்தி போட்டு உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தென்னிந்திய மொழிகளில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் ஆறாவது சீசனை தொட்டுள்ளது. கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில்  20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஒன்பது ஆண்கள், 10 பெண்கள், ஒரு திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளனர்.  இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக சென்றாலும் அடுத்த அடுத்த நாட்களில் போட்டி ஆரம்பித்துவிட்டது.

சண்டைகள், சச்சரவுகள் என அதகலப்படுத்தி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகள் ஜி பி முத்து தனலட்சுமி சண்டைதான் தற்போது அதிக ரசிகர்களை ஈர்த்து வருகிறது என்று கூறலாம்.  அதற்கிடையே ஒரே வாரத்தில் காதல் கிசுகிசுவும் எழுந்து விட்டது. அதன்படி ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை  காதல் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் அதனால் தான் ரச்சிதா தற்போது எல்லாம் நெற்றியில்  பொட்டு வைத்தபடி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதேபோல ராம் -மகேஸ்வரி குறித்தும் கிசுகிசுகள் எழுந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...தயாரிப்பிலும் கலக்கி வரும் ஐஸ்வர்யா லட்சுமி...அவரே சொன்ன சுவாரஸ்யம் இதோ

மேலும் செய்திகளுக்கு...மேக்-அப் செய்து கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை..வீடியோவை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள்

மேலும் பிக் பாஸை வைத்து பல youtube சேனல்களும் தங்கள் வியூவர்ஸை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகரும் சினிமா விமர்சகருமான பபயில்வான் ரங்கநாதன் தற்போது பிக் பாஸ் 6 குறித்து பேசி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரட்சிதாவுக்கு ராபர்ட் நூல் விட்டதை அறிந்த  ரச்சிதா அவரிடம் இருந்து ஒதுங்கி விட்டதாகவும், மகேஸ்வரி, ராமை காதல் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். படிக்கையில் இருந்தபடியே ராமிடம் நெருங்கி பேசும் மகேஸ்வரி தன்னை பற்றி என்ன நினைப்பதாக கேட்டுள்ளார். இப்படி தான் காதல் ஆரம்பிக்கும் எனவும் புதிய தீப்பொறி ஒன்றை கொளுத்தி போட்டு உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Bigg Boss Hosts Salary : பிக் பாஸ் தொகுப்பாளர்களில் யாருக்கு அதிக சம்பளம்? நம்ம விஜய் சேதுபதி எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?