baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்

Published : Oct 20, 2022, 05:20 PM IST
baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்

சுருக்கம்

செழியன் உணவு வாங்கி வருவதை பார்த்த எழில் பாக்யாவிடம் இதைக் கூறுகிறார். இதனால் ஜெனி பாக்யாவிடம் மாட்டிக் கொள்கிறார்.

 

கோபியின் மறுமணத்தால் மனம் நொந்த பாக்கியலட்சுமி குடும்பத்தாருக்கு மகா சங்கமம் ஆறுதல் அளிக்கும் விதத்திலேயே இருந்தது. பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தாருடன் பாக்கியலட்சுமி குடும்பத்தாரும் கொடைக்கானல் டூர் சென்றிருந்தனர். அங்கு கோபி மற்றும் ராதிகாவை ஜோடியாக கண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் கோபி மற்றும் ராதிகாவை பார்த்த இடத்தில் எல்லாம் கலாய்த்து தள்ளி வந்தனர்.நேற்றைய எபிசோடில் கோபிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பாக்கியலட்சுமியை கோபியின் மனைவி என அறிமுகப்படுத்தினார் கோபியின் நண்பன். இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் குன்னக்குடிக்கும், பாக்கியலட்சுமி குடும்பத்தார் சென்னைக்கும் புறப்பட்டனர். இதன் மூலம் மகா சங்கமம் முடிவுக்கு வந்துள்ளது. பின்னர் வீடு திரும்பும் பாக்கியா உள்ளிடோர்காக  சமைக்கும் முடிவை கையில் எடுக்கிறார் ஜெனி. மூன்று நாட்களாக அனைவரும் வெளியில் சாப்பிட்டு இருப்பார்கள் இன்று வீட்டில் சாப்பிட வேண்டும் அதனால் சமைக்க போகிறேன் என செழியனிடம் கூறுகிறார் ஜெனி. ஆனால் செழியன் ஹோட்டலில் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூற இல்லை நானே சமைக்கிறேன் என மாவைய எடுத்து வைக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...Janhvi Kapoor : கண்ணா பின்னாவென கட் செய்த உடையில் ஜான்வி கபூர்...நியூ லுக் போட்டோஸ் இதோ
 

அப்பொழுது செழியனின் ரொமான்ஸால் மாவு கீழே கொட்டிவிடுகிறது. பின்னர் செழியன் உணவு வாங்க ஹோட்டலுக்கு சென்று விடுகிறார். அப்போது குடும்பத்தார் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களிடம் ஜெனி மூன்று நாட்களாக உணவு சமைக்காமல் வெளியில் மற்றும் அம்மா வீட்டிற்கு சென்று சாப்பிட்டதை கூறுகிறார். இதையடுத்து அனைவரும் கிண்டல் செய்கின்றனர். இதை சமாளிக்க டூர் எப்படி இருந்தது என கேட்கிறார் ஜெனி. உடனே குடும்பத்தார் அனைவரும் அமைதியாகிவிட, பாக்கியா  மட்டும் நல்லா இருந்தது என கூறுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...டூ பீஸில் மனதை கவரும் வெந்து தணிந்தது காடு பட நாயகி சித்தி இத்தானி

பின்னர் அனைவரும் சென்று ஓய்வெடுங்கள் நான் சமைத்து வைக்கிறேன் என் ஜெனி கூறி அனுப்புகிறார். அந்த நேரத்தில் செழியன் உணவு வாங்கி வருவதை பார்த்த எழில் பாக்யாவிடம் இதைக் கூறுகிறார். இதனால் ஜெனி பாக்யாவிடம் மாட்டிக் கொள்கிறார். மறுபுறம் ராதிகா மிகவும் சோகமாக வருவதை பார்த்து அவருடைய அம்மா என்ன ஆச்சு என கேட்க, என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒரு வழியாக சமாளித்து தனது ரூமுக்கு செல்கிறார் கோபி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!