ரஜினி... விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா?’ உணர்ச்சி வசப்பட்ட கூல் சுரேஷ்

Published : Oct 21, 2022, 07:37 PM ISTUpdated : Oct 21, 2022, 07:58 PM IST
ரஜினி... விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா?’ உணர்ச்சி வசப்பட்ட கூல் சுரேஷ்

சுருக்கம்

இனிமேல் பத்து தலைக்கு தான் ப்ரொமோஷன் பண்ண போறேன் படத்தை பாருங்க என்ஜாய் பண்ணுங்க என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சிம்புவின் தீவிர ரசிகராக மாறிவிட்ட கூல் சுரேஷ். படம் வெளியாவதற்கு முன்பு வெந்து தணிந்தது காடு என்ற வசனத்துடன் தனது பட விமர்சனங்களை ஆரம்பித்தார். தமிழ் படங்கள் சிலவற்றை குண சித்திரவேடங்களில் வேடங்களில் நடித்து வந்த கூல் சுரேஷ் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். ஆனால் இவர் புது படங்களின் விமர்சனங்களை தெரிவிப்பதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.   படம் ரிலீஸ் ஆகும் வரை வெந்து தணிந்தது காடு என கூறி வந்த இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துவிட்டது. பின்னர் பட ரிலீஸின் போது உணர்ச்சி வசப்பட்ட இவர் வெளியிட்டு இருந்த வீடியோக்களும் வைரலாகின.

இதைத்தொடர்ந்து படத்தின் வெற்றியை அடுத்து ஐசரி  கணேஷ் இவரை நேரில் சந்தித்து iphone ஒன்றை பரிசளித்ததுடன். அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இதன் பிறகும் தொடர்ந்து பட விமர்சனங்களை கூறி வந்த கூல் சுரேஷ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பிரிண்ஸ் படம் குறித்த விமர்சனங்களையும் கூறியுள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த இவர், யூடியூபர்கள் முன்னிலையில் வந்து வெந்து தணிந்தது காடு படம் வெளியானதால் தனது டயலாக்கை மாற்றிக் கொள்கிறேன். இனிமேல் எஸ் டி ஆரின் பத்து தல சிம்புனா கெத்து தல என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... மாப்பிள்ளை மரியாதை கிடைக்காமல் அசிங்கப்படும் கோபி..இன்றைய எபிசோட்

அதோடு இந்த பிரின்ஸ் படத்தில் மெசேஜ் ஒன்றும் பெருசா இல்லை படத்தை பார்த்துவிட்டு, நல்லா சிரித்து விட்டு போகலாம். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனந்த்ராஜ் சார் வரும் பத்து நிமிடங்கள் படம் பிரமாதமாக இருக்கு. ஆனந்த் ராஜ் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அதோடு  என் மச்சான் சிவகார்த்திகேயன் பற்றி தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச் செழியன், ரஜினி.. விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...லோஹிப் பேன்ட் அணிந்து வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

 நீங்கள் எதை வைத்து அப்படி கூறுனீர்கள் ? என கேள்வி எழுப்பிய கூல் சுரேஷ் அப்படியே பிளேட்டை மாற்றி.. ஆமா உண்மையிலேயே ரஜினி.. விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் மாஸாக இருக்காரு. அன்புச் செழியன் சார் நீங்க சொன்னது நடந்து விட்டது. என் மச்சான் சிவகார்த்திகேயன் ஜெயிச்சுட்டான்  என கூறியுள்ளார். அதோடு இனிமேல் பத்து தலைக்கு தான் ப்ரொமோஷன் பண்ண போறேன் படத்தை பாருங்க என்ஜாய் பண்ணுங்க என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!