ShahRukhKhan movie : அட்லீ - ஷாருக்கான் படம் என்ன ஆனது?... அடுத்தகட்ட ஷூட்டிங் குறித்து வெளியான முக்கிய தகவல்

By Asianet Tamil cinema  |  First Published Mar 24, 2022, 6:26 AM IST

ShahRukhKhan movie : பிகில் படத்துக்கு பின்னர் இயக்குனர் அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கான் படம். இந்தியில் தயாராகும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். 


அட்லீயின் வளர்ச்சி

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அடுத்ததாக விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ.

Tap to resize

Latest Videos

விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட்

விஜய் ஹீரோவாக நடித்திருந்த அப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதையடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த அட்லீ, அடுத்தடுத்து விஜய் உடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் கூட்டணி அமைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இதன்மூலம் நடிகர் விஜய்யின் பேவரைட் இயக்குனராகவும் உருவெடுத்தார் அட்லீ.

ஷாருக்கான் உடன் கூட்டணி

பிகில் படத்துக்கு பின்னர் இயக்குனர் அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கான் படம். இந்தியில் தயாராகும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மேலும் யோகிபாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாதியில் நிற்கும் படப்பிடிப்பு

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஷாருக்கான் மகன் போதை வழக்கில் சிக்கியபோது தடைபட்டது. மகனை வழக்கில் இருந்து மீட்க ஷாருக்கான் சென்றதால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து இப்படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால், இப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவத் தொடங்கின.

அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது?

இந்நிலையில், அட்லீ- ஷாருக்கான் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் தொடங்க உள்ளதாம். அதில் நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அடுத்த வாரம் மும்பை செல்ல உள்ளாராம் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... Valimai : ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?... ‘வலிமை’யின் உண்மையான வசூலை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்

click me!