சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் டபுள் ட்ரீட்..! 'அண்ணாத்த' படத்தின் வேற லெவல் அப்டேட்..!

Published : Sep 09, 2021, 01:51 PM IST
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் டபுள் ட்ரீட்..! 'அண்ணாத்த' படத்தின் வேற லெவல் அப்டேட்..!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் 'அண்ணாத்த' படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த நிலையில், நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதோடு, மற்றொரு சூப்பர் தகவலை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.  

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் 'அண்ணாத்த' படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த நிலையில், நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதோடு, மற்றொரு சூப்பர் தகவலை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

மேலும் செய்திகள்: அந்தரத்தில் பறந்து பறந்து ரஷ்யாவில் சாகசம் செய்த 'வலிமை' டீம்..! வைரலாகும் வேற லெவல் BTS புகைப்படங்கள்..!
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதம் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு,  தலைவர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படக்குழுவிற்கு குட் பை சொல்லிவிட்டு தனி விமானத்தில் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டும் பின்னர் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும், மீண்டும் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் டப்பிங் பணியை முடித்தவும், மீனா, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலானது.

மேலும் செய்திகள்: பிகினி உடையில் படுத்தூள்... கவர்ச்சியில் எல்லை மீறும் ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஸ்..!
 

தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா தாக்கம் தமிழகத்தில், கட்டுக்குள் வந்துவிட்டால், தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே 'அண்ணாத்த' படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற தீவிர முயற்சியிலும் படக்குழு இறங்கியுள்ளது. சமீபத்தில் அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேள்வி கேட்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கேட்ட நிலையில் ரசிகர்களின் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக சூப்பர் தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இந்த மாதம் திருமணமா? கல்யாணத்திற்கு பின் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுக்கிறாரா?
 

அதிலும் நாளை ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கிறது டபுள் ட்ரீட். நாளைய தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கும், 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டர், மாலை 6 மணிக்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தற்போது தலைவரின் ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள். 

  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை