'அண்ணாத்த' படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற தீவிர முயற்சியிலும் படக்குழு இறங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதம் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு, தலைவர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படக்குழுவிற்கு குட் பை சொல்லிவிட்டு தனி விமானத்தில் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டும் பின்னர் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் மீண்டும் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் டப்பிங் பணியை முடித்தவும், மீனா, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை முடித்துள்ளனர்.
கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டால், தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளத். எனவே 'அண்ணாத்த' படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற தீவிர முயற்சியிலும் படக்குழு இறங்கியுள்ளது. சமீபத்தில் அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேள்வி கேட்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விநாயகர் சதுர்த்தி நாளான நாளை மறுநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கோலிவுட்டின் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.