கொரோனா பிரச்சனையால் சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகரின் திருமணம்..!

By manimegalai a  |  First Published Aug 17, 2020, 6:29 PM IST

கொரோனா லாக் டவுன் நேரத்தில், பிரமாண்டமாக நடைபெற வேண்டிய பல திருமணங்கள் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் நினைத்ததை விட எளிமையாக திருமணம் செய்துகொண்டவர்கள், நடிகர் நிதின், ராணா, என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த லிஸ்டில் தற்போது மற்றொரு நடிகரின் திருமணமும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
 
மேலும் செய்திகள்: மகாராணி போல் பளபளக்கும் நகைகள் அணிந்து... பிரமிக்க வைக்கும் உடையில் இந்துஜா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
 
Tap to resize

Latest Videos

அவர் வேறு யாரும் இல்லை, உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பாபநாசம்'. படத்தில் மிரட்டலான இளம் வில்லனாக நடித்திருந்த ரோஷன் பஷீருக்கு தான்தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் தளபதி விஜய்யுடன் 'பைரவா' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவருக்கும் ஃபர்ஸானா என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயார்த்தம் நடைபெற்ற நிலையில், (16/08/2020) அன்று உறவினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இவர்களுடைய திருமணம் நேற்று எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

மேலும் செய்திகள்: பளபளக்கும் தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து... இளசுகளை மயக்கும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்..!
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிக நபர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை இந்நிலையில், தன்னுடைய திருமணத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக,ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர பலர் இவருக்கு தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

View this post on Instagram

16-08-2020🎈

A post shared by Roshan Basheer (@roshan_rb) on Aug 16, 2020 at 8:40pm PDT

click me!