தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறி வருகிவந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பேச்சு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது வரை திறக்கவில்லை. அரசின் அனுமதியோடு திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு சில பணியாளர்களை வைத்து திரையரங்குகளை சுத்தம் செய்து வருகிறார்கள். அதே வேலையில் சில திரையரங்கு சேர் உள்ளிட்ட பொருட்கள் எலிகளால் சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது.
மேலும் செய்திகள்: பிரபல தமிழ் நடிகருடன் காதலா? வீட்டுக்கு ரகசிய விசிட் அடித்து சிக்கிய நிக்கி கல்ராணி! வெளியான புகைப்படம்!
கிட்ட தட்ட கடத்த நான்கு மாதங்களாக எந்த திரைப்படமும் திரையரங்கில் ரிலீஸாகவில்லை. மாறாக, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின், பெண்குயின், போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் சில படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் கலகலப்பாக கூட்டம் அலைமோதி வரும் திரையரங்குகள், நான்கு மாதமாக வெறிச்சோடி கிடைப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்: இவ்வளவு பிரமாண்டமா? வியக்க வைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீடு..! வாங்க பார்க்கலாம்..!
இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறி வருகிவந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பேச்சு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உரிய பாதுகாப்புடன் திரைப்படங்கள் வெளியிட, அரசு நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து ஒரு பக்கம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா வாழும் வீடு இது தான்..! தனுஷின் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க!
இந்நிலையில் இந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு ’தமிழகத்தில் கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர படாத காரணத்தாலும், மக்களை காக்க துரித முயற்சிகள் எடுத்து வரும் அரசு, தற்போதைக்கு திரையரங்குகள், வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு எந்த தளர்வுகளும் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.