
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை, கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகளுக்கு யாத்ரா, லிங்கா, என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
தன்னுடைய காதல் கணவர் தனுஷுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஆண்டு திடீரென, தனுஷை விட்டு பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷை சேர்த்து வைக்க பல முறை, அவர்களுடைய குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போன நிலையில், தற்போது சட்டப்படி விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.