செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது மகளின் முதல் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் திவ்யா ஸ்ரீதர். அவர் தன்னுடன் சீரியலில் நடித்த அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான திவ்யாவுக்கும் நடிகர் அர்னவ்விற்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்னவ் அடித்து காயப்படுத்தியதாக திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அர்னவ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததால் தான் அவரை விட்டு பிரிந்துவிட்டார் திவ்யா. அர்னவ்வை பிரிந்த பின்னர் தனியாக வசித்து வந்த திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு செவ்வந்தி சீரியல் நடிகர், நடிகைகள் வளைகாப்பு நடத்தினர். இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையும் படியுங்கள்... varalaxmi : வருங்கால கணவருடன் சேர்ந்து தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி - பர்த்டே கிளிக்ஸ் இதோ
கர்ப்பமான பின்னர் கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும் குழந்தையை தனியாக வளர்த்து வந்தார் திவ்யா ஸ்ரீதர். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார் திவ்யா. ஓராண்டாகியும் மகளை இதுவரை அர்னவ் பார்க்க வரவில்லை. இந்த நிலையில், அவர் தன்னுடைய மகளின் முதலாவது பிறந்தநாளுக்காக எமோஷனல் பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில், ஒரு வருடத்திற்கு முன் ஒரு தேவதை பிறந்தாள். நாங்கள் அவளின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சி உடன் கொண்டாடி உள்ளோம். ஹாப்பி பர்த்டே கண்ணம்மா என பதிவிட்டு தன் மகள் புத்தாடை உடுத்தி நடந்து வரும் வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் திவ்யா ஸ்ரீதரின் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளன. அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Pushpa 2 The Rule Teaser : புஷ்பா இஸ் பேக்... அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் மிரட்டலான டீசர்