விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், ஒரு பாடலைக் கேட்டு கண்கலங்கியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது நீயா நானா நிகழ்ச்சி. விவாத நிகழ்ச்சியான இதை கோபிநாத் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு டாப்பிக் விவாதிக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் தத்துவப் பாடல்களைப் பற்றிய விவாதம் நடைபெற்றது. இதில் பாடகர்கள் ஒருபுறமும், ரசிகர்கள் மறுபுறமும் அமர்ந்து தத்துவப் பாடல்கள் பற்றி பேசினர்.
இந்த தத்துவப் பாடல்கள் குறித்த விவாதத்தின் போது, பாடகர் ஒருவர் நிழல்கள் படத்தில் இடம்பெற்ற ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்கிற பாடலை பாடினார். அந்த பாடலில் இருந்து வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கு அது சேது சொல்லும்’ என்கிற வரிகளை பாடினார். உணர்வுப்பூர்வமான அந்தப் பாடலை கேட்டதும் அந்த பாடகரோடு சேர்ந்து அப்பாடலை பாடி தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் கோபிநாத்.
இதையும் படியுங்கள்... Anirudh Andrea : அந்த வயசுலயே ஆண்ட்ரியா உடன் நெருக்கம்... முதல் காதல் தோல்வி குறித்து மனம்திறந்த அனிருத்
அதன்படி கேகே நகர் தெருக்களில் 13 கிலோ துணி மூட்டைய தூக்கிட்டு நான் திரிஞ்சப்போ என்னை ஃபீல் பண்ண வச்ச பாட்டு இது என தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்த கோபிநாத்துக்கு தன்னுடைய அந்த வலிகளை கண்ணீர் வாயிலாக வெளிப்படுத்தினார். அப்போது சற்று எமோஷனல் ஆன அவர், ஒரு பிரேக் எடுத்துக்கலாம் என கேட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஆரம்ப காலகட்டத்தில் துணி வியாபாரம் செய்த கோபிநாத், படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் சிறந்த தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பதற்கு பின்னணியில் உழைப்பு மட்டுமில்லை உத்வேகமும் தேவைப்பட்டு இருக்கிறது. அந்த உத்வேகத்தை அவருக்கு கொடுத்த பாடல்களில் ஒன்றாக ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்கிற பாடலும் இருந்துள்ளது இந்நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
உள்ளத்தை உருக்கும் தத்துவ பாடல்கள்..😍
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/xC2Cf8mjcB
இதையும் படியுங்கள்... ஒரே டியூனில் 2 பாட்டு போட்ட விஜய் ஆண்டனி... ஒன்னு பிளாப்; இன்னொன்னு மாஸ் ஹிட் - அது என்ன பாட்டு தெரியுமா?