"எங்கள் நடிப்பில் கிடைக்கும் சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை" என்று ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆலியா மானசா. அந்த சீரியல் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர் அந்த சீரியல் கதாநாயகனான சஞ்சீவின் மனதையும் கவர்ந்துவிட்டார். இருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். இருவர்களுக்கு இப்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
எம்.எல்.எம் நிறுவனம் ஆலியா பயன்படுத்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தை சார்ந்த சிலர் பிரபலங்களுக்கு போன் செய்து ஆலியா மானசா தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால், பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் ஆலியா மானசாவை போனில் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்கிறார்களாம். அவர்களிடம் ஆலியா நான் அதுமாதிரி எதுவுமே சொல்லவில்லை என்று விளக்கம் சொல்கிறாராம்.
இதுபோன்ற தொடர் அழைப்புகளால் கடுப்பான ஆலியா கணவர் சஞ்சீவ் உடன் சென்று புகார் அளித்திருக்கிறாராம். தனது பெயரைக் கூறுவதால் வதந்தியை நம்பி, ஏமாற வேண்டாம் என்றும் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
"எங்கள் நடிப்பில் கிடைக்கும் சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை" என்று ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
"வீடு, கார், பைக் என எல்லாமே EMI மூலம்தான் வாங்கியிருக்கிறோம். இப்போதும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருக்கிறோம்" என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளனர். இதுபோல விதவிதமான சர்ச்சைக்குரிய தகவல்களைப் பரப்பிவிடும் விஷமிகளால் ஆலியா மானசா ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.