Actress Shamitha Shreekumar : சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் வெளியான "பாண்டவர் பூமி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை தான் ஷமிதா.
பிரபல இயக்குனர் சேரனின் "பாண்டவர் பூமி" திரைப்படத்தில் ஜீவா மற்றும் தாமரை ஆகிய இரு வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை தான் சமிதா. ஆனால் அதற்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் வெள்ளித் திரியில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய "சிவசக்தி" என்ற நாடகத்தின் மூலம் மீண்டும் தனது கலை உலக பயணத்தை துவங்கினார். சேரனின் "பொற்காலம்" திரைப்படத்தில் நடித்த நடிகை ராஜேஸ்வரியின் தங்கைதான் நடிகை சமிதா என்பது குறிப்பிடத்தக்கது
அன்று துவங்கி இன்று வரை பல முன்னணி சேனல்களில், பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். சீரியலில் நடித்து வந்த காலத்தில், தன்னுடன் பணியாற்றிய சக கலைஞரான ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஹீரோவாக பல நாடகங்களில் நடித்து வரும் ஸ்ரீகுமாருக்கு சின்னத்திரையில் பெரிய வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஷமிதா சில காலங்களுக்கு முன்பு அளித்த பேட்டியொன்று இப்போது வைரலாகி வருகின்றது. அதில் பிரபலங்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய ரகசியங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதால் அவற்றால் நடக்கும் விபரீதங்கள் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் அவர்கள்.
சின்னத்திரையோ வெள்ளித்திலையோ அனைவருக்கும் வாய்ப்புகள் என்பது எப்பொழுதும் கிடைப்பதில்லை. அதேபோல பிரபலங்கள் அனைவருக்கும் அவரவர்க்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. அதில் நடக்கும் நல்லது மற்றும் தீயதை தங்கள் குடும்பத்திற்குள் வைத்துக் கொள்வதே மிகவும் நல்லது. அதை பற்றி பொதுவெளியில் பேசினால் அந்த பிரச்சனை இன்னும் அதிகமாகத்தான் செய்யும் தவிர அதற்கு எந்த தீர்வும் இறுதிவரை கிடைக்காது என்று அவர் பேசியிருக்கிறார்.
நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கிய பிரபல நடிகை.. தயங்காமல் நடித்துக் கொடுத்த சிவாஜி..