ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஜானகி கேக் கட் பண்ணியதும் மாயா அவரும் சந்தியாவும் ஒன்றாக இருக்கும் போட்டோவை கிப்டாக கொடுக்கிறாள். இதை பார்த்து ஜானகி சந்தோஷப்பட ரமணி ஒரு தங்க நெக்லஸை பரிசளிக்கிறார்.
பிறகு எல்லோரும் ரூமுக்கு சென்று விட ரகுராம் ஜானகி இடம் இதுவரைக்கும் உன்னுடைய பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வருஷமும் நான் உனக்கு கிப்ட் வாங்கி கொடுத்து இருக்கேன் ஆனா நான் அதை உன்னுடைய பிறந்த நாளுக்குனு சொல்லிக் கொடுத்ததில்லை என்று உண்மைகளை உடைக்க ஜானகி அந்த விஷயங்களை நினைத்து பார்த்து பீல் பண்ணுகிறாள்.
அடுத்ததாக ரகுராம் ஜானகியை கோவிலுக்கு கூட்டிச் சென்று சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அவரது ஆசைப்படி பைக்கில் கூட்டி வர ஜானகி மிகுந்த சந்தோஷம் அடைகிறார். ஜானகி வீட்டில் விட்டுவிட்டு அவர் வெளியில் கிளம்பி விட பவானி ஓடி வந்து தனம் காலேஜில் மயக்கம் போட்டு விழுந்துட்டா உங்களை கூட்டிட்டு வர சொன்னா என்று சொல்ல ஜானகி பதறி அடித்து ஓடுகிறாள்.
பாக்சிங் மேடையாக மாறிய தமிழா தமிழா! புருஷன்களை துவைத்து எடுத்த பெண்கள், இதெல்லாம் ஒரு காரணமா?
கடைசியில் ஜானகியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை தியேட்டருக்கு கூட்டிச் சென்று சப்ரைஸ் செய்கின்றனர். ஆனால் ஜானகி எனக்கு ஆசை இருக்கு தான் ஆனா நம்ம குடும்ப கட்டுப்பாடுகளை மீறி அதை பண்ணனும்னு தோணல என்று ஷாக் கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.