5 பைனலிஸ்டுகளிடையே அனல் பறக்கும் மோதல்... டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை தட்டிதூக்கப் போவது யார்?

By Ganesh A  |  First Published Apr 8, 2024, 12:20 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கிராண்ட் பைனலை நெருங்கி இருக்கிறது.


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் செமி பினாலே ரவுண்ட் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 14-ம் தேதி கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் ஜோடியாக சுரேஷ், ஹேமா பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனலில் பங்கேற்க போகும் மற்ற 4 ஜோடிகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Latest Videos

இதையும் படியுங்கள்... Anna Serial : சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

சுரேஷ் - ஹேமா ஜோடி, இப்ராஹிம் - அக்‌ஷிதா ஜோடி, நவீன் - அக்‌ஷதா ஜோடி, கௌரி - விவேக் ஜோடி, ஜான் எட்வின் - ரிஷா ஜேக்கப் ஜோடி ஆகிய ஐந்து ஜோடிகள் தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு முன்னேறி இருக்கின்றனர். இந்த ஐந்து ஜோடிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த 5 ஜோடியில் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பதை கிராண்ட் பைனல் நிகழ்ச்சியின் முடிவில் தெரியவரும். வெற்றியாளருக்கு டிராபி உடன் பரிசும் வழங்கப்படும். அதை தட்டிதூக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியை ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கர்ப்பமான நடிகையை கைவிட்ட கணவன்... ஒரு வயதை எட்டிய மகள் குறித்து திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட உருக்கமான பதிவு

click me!