
அந்த வகையில் பிரபல இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் திரைக்கதையில், இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுச்சரன் முருகையின் இயக்கத்தில், ரிஜெக்ட் கெவின் படத்தொகுப்பில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி. எஸ் இசையில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இணைய தொடர் தான் சுழல் The Vortex.
இந்த இணைய தொடரில் பிரபல நடிகர் பார்த்திபன், நடிகை ரெட்டி, கோபிகா ரமேஷ், பிரபல நடிகர் கதிர், நடிகை லதா ராவ், மூத்த தமிழ் நடிகர் சந்தான பாரதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் தங்களுடைய நெருங்கிய உறவினர்களால் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக முடியும்.
ஆகவே பெற்றோர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு மிகச்சிறந்த இணைய தொடராக சுழல் திகழ்ந்தது. இந்த சூழலில் புஷ்கர் மற்றும் காயத்ரி தற்பொழுது அளித்துள்ள தகவலின்படி, அந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் தற்போது முழுவதுமாக தயாராகியுள்ளது.
இன்னும் சில காட்சிகளை படம்பிடிக்கப்பட வேண்டி உள்ளது என்றும், விரைவில் இந்த இணைய தொடர் மீண்டும் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூழல் இணைய தொடருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.