இதை நான் ஏற்க மறுக்கிறேன்...திருமணமான 3வது நாளே காஜல் அகர்வால் வெளியிட்ட பரபரப்பு கடிதம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 04, 2020, 01:36 PM ISTUpdated : Nov 04, 2020, 01:37 PM IST
இதை நான் ஏற்க மறுக்கிறேன்...திருமணமான 3வது நாளே காஜல் அகர்வால் வெளியிட்ட பரபரப்பு கடிதம்...!

சுருக்கம்

தற்போது காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வரும் காஜல் அகர்வால்  நான் மறுக்கிறேன் என்ற தலைப்புடன்  பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் கடந்த 30ம் தேதி மாலை திருமணம் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நண்பராக இருந்து வந்த கெளதம் கிட்சிலுவுடன் காஜல் அகர்வாலுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார்.  

கோலாகலமாக நடைபெற வேண்டிய காஜல் அகர்வாலின் திருமணம் கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உட்பட 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வரும் காஜல் அகர்வால்  நான் மறுக்கிறேன் என்ற தலைப்புடன்  பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது கொஞ்சம் காலதாமதமானது என எனக்கு தெரியும்.  இந்தக் கடிதத்தின் மூலமாக, நான் ஒட்டுமொத்த உலகின் முன்பு மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால் எனது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் எளிமையான வழி. பின்னர் வருத்தப்படுவதை விட கடைசி நிமிடத்தில் வேண்டாம் என்று மறுப்பது நல்லது. ஒரு சின்ன கிருமி, இந்த உலகை நான் பார்க்கும் விதத்தை மொத்தமாக மாற்றும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் சண்டையிட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சரியான சிகிச்சை எதுவும் இல்லாத, அச்சத்தால் உலகம் சூழப்பட்டிருக்கும் நிலை.  நான் வாழ்க்கையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது. 

 

இதையும் படிங்க: காதல் மனைவியுடன் கருணாஸ் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்... கறுப்பு உடையில் கலக்கல் கிளிக்ஸ்...!

என்னைப் பற்றியும் இந்த உலகத்தைப் பற்றியும் நான் நினைத்து வைத்திருக்கும் பல விஷயங்களுக்கு சவால் விடுத்துள்ளது.தற்போது நாம் வாழும் இந்த நிலைக்கு நான் பெரிதாக மறுக்கிறேன். தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற, அச்சமான சூழலை மறுக்கிறேன். கிருமிக்கு நமது தற்போதைய பதிலடியையும், நம்மிடம் இருக்கும் சுகாதார அளவுகோல்களையும் நான் மறுக்கிறேன். நெருக்கடி ஆரம்பித்த 11வது மாதத்தில், நானும் மற்றவர்களும் ஒரு நல்ல பாதுகாப்போடு தயாராகியிருக்க வேண்டும். வெளியே செல்லும் போது நாம் அனைவரும் பயமின்றி செல்ல வேண்டும். 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் இணைந்த மீனா... வைரலாகும் போட்டோ...!

இந்த கிருமிக்கு சரியான பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும்.இந்த நெருக்கடிக்கு உடனடியான, இதுவரை இல்லாத ஒரு நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். நாம் இன்று எடுக்கும் முடிவுகள் தான் வரப்போகும் பல நூறு வருட எதிர்காலத்தை வடிவமைக்கும். எனது எண்ணங்களை உங்கள் அனைவருடனும் நான் பகிர வேண்டும். என்பதால் இதனை எழுதுகிறேன். என் வாழ்க்கையின் புதிய கட்டத்தை நான் ஆர்வத்தோடு எதிர்நோக்கும் நேரத்தில், நான் வாழ்ந்த முறைகளை உடைத்து வெளியேறுகிறேன். பாதுகாப்பான உலகம் மட்டுமே என் தேவை, அதற்குக் குறைவாக எதையும் நான் ஏற்க மறுக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் காஜல் அகர்வால் எழுதியிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!