விவாத மன்றத்திற்கு வரும் சம்யுக்தா - ஆரி பிரச்சனை..! திமிராக பேசும் பாலா..! பரபரப்பான புரோமோ..!

Published : Nov 04, 2020, 10:48 AM IST
விவாத மன்றத்திற்கு வரும் சம்யுக்தா - ஆரி பிரச்சனை..! திமிராக பேசும் பாலா..! பரபரப்பான புரோமோ..!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாசம் அதிகமாக இருப்பதாக சில கமெண்ட்ஸ் வந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் புதிய புதிய டாஸ்குகளை கொடுத்து, பல பிரச்சனைகளில் போட்டியாளர்களை சிக்க வைக்கிறார் பிக்பாஸ்.  

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாசம் அதிகமாக இருப்பதாக சில கமெண்ட்ஸ் வந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் புதிய புதிய டாஸ்குகளை கொடுத்து, பல பிரச்சனைகளில் போட்டியாளர்களை சிக்க வைக்கிறார் பிக்பாஸ்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், விவாத மன்றம் டாஸ்க் நடக்கிறது. இதற்க்கு நீதி வழங்குபவராக உள்ளார் சுசித்ரா. நேற்றைய தினம் பாலா - சனம் ஷெட்டி பற்றிய விவாதத்தில், பாலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க பட்டது. அதை தொடர்ந்து சுரேஷ் - சனம் குறித்த விவாதத்திற்கு, சனம் தரப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில்... சம்யுக்தா மற்றும் ஆரி குறித்த விவாதம் மன்றத்திற்கு வருகிறது. அதில் தற்போதைய தலைவராக இருக்கும், சாம்... ஆரியை இங்கு இருப்பவர்கள் கார்னெர் செய்வதாக நினைக்கிறார் அது உண்மை இல்லை என தெளிவாக சொல்கிறார்.

இதை தொடர்ந்து பேசும் ஆரி ,ஒரு கேப்டனின் கடமை என்ன என்பதே தெரியாமல் கேப்டன் ஆகி இருக்கிறார் சம்யுக்தா என்று, ஆரி தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். மேலும் இந்த வீட்டிற்கு நீங்கள் உடல்பயிற்சி செய்ய வந்திருக்கிறீர்களா? அல்லது எதற்கு வந்திருக்கிறீர்கள் என முதலில் கேட்டது அவர் தான் என தன்னுடைய தரப்பு நியாயத்தை ஆரி கூறும் போது, பாலா எதோ முணுமுணுக்கிறார்.

இதை அறிந்து ஆரி, எதுவாக இருந்தாலும் இங்கு வந்து பேசு என ஆரி கூறும் போது... முடியாது என கொஞ்சம் திமிராக வாயை விடுகிறார். இதுகுறித்த பரபரப்பான புரோமோ இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?