பாம்பால் படப்பிடிப்பிற்கு வந்த சிக்கல்... நடிகர் சிம்பு மீது பாய்கிறதா வழக்கு?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 03, 2020, 10:15 PM IST
பாம்பால் படப்பிடிப்பிற்கு வந்த சிக்கல்... நடிகர் சிம்பு மீது பாய்கிறதா வழக்கு?

சுருக்கம்

இந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், சிம்பு பாம்பை கொடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நடிகர் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சுசீந்திரன் உடன் கூட்டணி சேர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் 46வது படமான இது முற்றிலும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இதற்காக சிம்புவும் தனது உடல் எடையை கடினமாக முயன்று கணிசமாக குறைத்துள்ளார். அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதால் அவரைக் காண ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வருகிறது. அப்படி ஷூட்டிங்கை காண வரும் ரசிகர்கள் அங்கு நடக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அப்படி ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், உண்மையாகவே உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

 

இந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், சிம்பு பாம்பை கொடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். எனவே வன உயிரின சட்டம் 1972ன் படி சிம்பு செய்தது குற்றம் என வன உயிரின ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!