உதவி செய்வதை கூட இப்படி நினைத்தால்... விஜய்க்கு அனுதாபங்கள்! வைகை செல்வன் பரபரப்பு ட்வீட்!

By manimegalai a  |  First Published Jun 17, 2023, 7:06 PM IST

அதிமுக கட்சி செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், விஜய் எதிர்கால வாக்காளர்கள் என்று மாணவர்களுக்கு உதவி செய்தால் அவருக்கு அனுதாபங்கள் என்று பரபரப்பாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், கமல்ஹாசனை தொடர்ந்து, விரைவில் தீவிர அரசியலில் அடியெடுத்து வைக்கும் விதமாக, தன்னுடைய விஜய் மக்கள் மன்ற ரசிகர்கள் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில்.. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில், அவர்களை சந்தித்து ஊக்கத்தொகைனையும் சான்றிதழ்களையும் வழங்கி உள்ளார்.

Tap to resize

Latest Videos

இது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு! மாணவ - மாணவிகளிடம் விஜய் வைத்த கோரிக்கை!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மாணவர்கள் முன்பு பெரியார், அம்பேத்கர், காமராஜர், போன்றவர்களை பற்றி படிக்க வேண்டும் என கூறியதை பலர் வரவேற்று வருகிறார்கள். குறிப்பாக கரு பழனியப்பன் பெரியார், அம்பேத்கார், மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி படித்தாலே அவர்கள் சரியான தலைவரை தேர்தெடுப்பார்கள் என கூறி இருந்தார்.

நெகட்டிவ் விமர்சனங்களை நீக்க 5500 முதல் 9500 வரை பேரம் பேசுகிறதா 'ஆதிபுருஷ்' படக்குழு? பகீர் குற்றச்சாட்டு!

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் "நீங்கள் தான் வருங்கால வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து, நம்ப கண்ணை குத்தி கொள்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். நான் எதை சொல்கிறேன் என்றால், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொண்டாலும், ஒரு லட்சம் பேருக்கு என்றால் 15 கோடி வரை செலவு செய்கிறார்கள். இத்தனை கோடி செலவு செய்யும் ஒரு அரசியல்வாதி, அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும் என நினைத்து பாருங்கள்.

மேலும் இது போன்ற விஷயங்கள் பாடப் புத்தகத்திலும் இடம்பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் இருக்கிற ஒவ்வொரு மாணவ - மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களிடம் சென்று காசு வாங்கிவிட்டு ஓட்டு போட வேண்டாம் என சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் கண்டிப்பாக கேட்பார்கள் என்றார். ஏனென்றால் நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓட்டு போட உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் என அரசியல் பொறுப்புணர்வோடு கூறினார்.

'விஜய் கல்வி விருது விழா' எளிமையாக வந்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கலகலப்பூட்டிய தளபதி!

விஜயின் இந்த பேச்சுக்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், எழுத்தாளருமான வைகைச் செல்வன், நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவி செய்கிறார்... அவர் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள். அதேபோல் எதிர்கால வாக்காளர்களுக்கு என்று நினைத்து உதவி செய்தால், அவருக்கு அனுதாபங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நடிகர் விஜய்
மாணவர்களுக்கு உதவி செய்கிறார்…
அவர் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்...!
எதிர்கால
வாக்காளர்களுக்கு
என்று நினைத்து
உதவி செய்தால் அவருக்கு அனுதாபங்கள்..!

— வைகைச்செல்வன் (@vaigaichelvan)

 

click me!