
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை யாமி கவுதம், பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் முதல்முறையாக புகைப்படம் வெளியிட்ட விமல்..! கொள்ளை அழகு...
பல விளம்பரப்படங்களில் மாடலாக நடித்து பிரபலமான யாமி கெளதம், தமிழில் 'கெளரவம்' மற்றும் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றிபெறாததால், தமிழ் பட வாய்ப்புகள் குறைத்து. எனினும் தெலுங்கு, பஞ்சாமி, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக இவர் இவர் உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதித்யா தர் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்தது. மேலும் இருவரும் ரகசியமாக டேட்டிங் செல்வதாகவும் பாலிவுட் திரையுலகில் சில தகவல்கள் பரவி வந்த போதும், நடிகை யாமி கெளதம் மற்றும் ஆத்தியா தர் இருவருமே இதுகுறித்து பேசியது இல்லை.
மேலும் செய்திகள்: 5 ஜி சேவைக்கு எதிராக வழக்கு... ரூ. 20 லட்சம் அபராதம் கட்டும் நடிகை! ஏன் தெரியுமா?
மேலும் செய்திகள்: அம்மாவுடன் வந்து உதயநிதியை சந்தித்த வரலட்சுமி..! 2 டன் உணவு வழங்கி அசத்தல்..!
இந்நிலையில் இவர்களுக்கு நேற்று திடீர் என திருமணம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும், இரு தரப்பு நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து நடிகை யாமி கவுதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... திருமண புகைப்படத்தை வெளியிட்டு, எங்கள் குடும்பத்தினர் ஆசீர்வாதத்துடன், இன்று எங்கள் திருமணம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை எங்கள் குடும்பத்துடன் கொண்டாடினோம். அன்பு மற்றும் நட்பின் பயணத்தை நாங்கள் தொடங்கும்போது, உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் நாங்கள் வேண்டுகிறோம். இப்படிக்கு யமி மற்றும் ஆதித்யா என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.