கொரோனா தடுப்பூசி குறித்து வித்தியாசமான விழிப்புணர்வு..! டபுள் ஆக்ட்டிங்கில் கலக்கிய வரலட்சுமி!

Published : Jun 04, 2021, 07:23 PM IST
கொரோனா தடுப்பூசி குறித்து வித்தியாசமான விழிப்புணர்வு..! டபுள் ஆக்ட்டிங்கில் கலக்கிய வரலட்சுமி!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமி சரத்குமார், நடிப்பை தாண்டி பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமி சரத்குமார், நடிப்பை தாண்டி பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிப்பை தாண்டி தன்னால் முடிந்தவரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற இயற்க்கை சீற்றங்கள் போது, நடிகர் சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அதோடு மட்டும் இல்லாமல், கடந்த வருடம் கொரோனா முதல் அலை தலைதூக்கிய போது, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அம்மாவுடன் சேர்ந்து உணவு வழங்கிய வீடியோக்கள் வைரலாகியது. 

மேலும் தற்போது கொரோனா நேரத்தில் உணவில்லாமல் பசியால் வாடும் விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் என, ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து வருவதுடன், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள தெருநாய்களுக்கு உணவு வைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்றைய தினம் கூட Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவுவதற்காக  2 டன் உணவு உணவுகளை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தது வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது.

இதை தொடர்ந்து தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நேரத்தில், 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் பற்றி, தமிழக அரசும், சுகாதார துறையும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சிலர் பயம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவது இல்லை. 

பல பிரபலங்கள் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நிலையில், வரலட்சுமி சரத்குமார் கொஞ்சம் வித்தியாசமாக நடிப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவில்... டபிள் ஆக்ட்டிங்கில் கலக்கியுள்ளார். மொபைல்போனில் உரையாடல் நடக்கும் இந்த வீடியோவில் தடுப்பூசி போடவில்லை...  என்று ஒரு வரலட்சுமி கேட்க அதற்கு இன்னொரு வரலட்சுமி 'தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்று கூறுகிறார்கள்'. அது மட்டுமின்றி இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிக்கு ஏற்படுவதாகவும் கூறுகிறார்.

அதற்கு முதல் வரலட்சுமி 'தடுப்பூசி' என்பது ஒரு ஹெல்மெட் மாதிரி என்றும் ஹெல்மெட் போட்டவர்களுக்கு விபத்துகள் ஏற்படாது என்பது உறுதி அல்ல, ஆனால் விபத்து ஏற்பட்டாலும்,  உயிர் பிழைத்து விடுவார்கள். அதேபோல் தான் தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனா பாதிப்பு இருக்காது என்பது அல்ல...  ஆனால் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் கூறுகிறார். இதனை அடுத்து மறுமுனையில் இருக்கும் வரலட்சுமி நாளைக்கே நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். 

இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?